-கற்சுறா-




நாம் எதிர் கொள்ளும் சமூகத்தின் புற நிலைகளையும் பொதுமையான வாழ்வில் அடங்கிக் கொள்ளாத வாழ்வுமுறைகளையும் எவ்வாறு விளங்கிக் கொள்ள முடியும் என்றும் அதற்கான எல்லை எந்தளவு தூரம் நமக்கு விரிந்து கிடக்கிறது. என்பதையும் பேசுவதே எனது கட்டுரையின் நோக்கம்.
இங்கே அகநிலை என்பதற்குள் நான் அடக்க நினைக்கும் -நாம்- என்ற பதத்தின், சொல்லின் வன்முறை அடையாளத்தை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இதில் தற்போது நமக்கு அண்மித்திருக்கும் அல்லது நாம் பேசுவதற்கு அதிகம் நினைக்கும் ஒருபாலுறவு அதாவது தற்பாலுறவு, ஹோமோசெக்சுவல், லெஸ்பியன், என்ற இன்னோரன்ன தகமைபெற்ற வார்த்தைகளாலும் கம்பி சாப்பை சைக்கிள்  புரி ரொட்டி புல்லு வெட்டுற மிசின் என்ற மிக அதிகளவான கொச்சைத்தனமான வார்த்தைகளாலும் அழைக்கப்படுகின்றவர்கள் குறித்தே இங்கு பேசுகிறேன்.

மிக இறுக்கமான காலாசாரவழிமுறைகளாலும் தேசிய வெறியூட்டப்பட்ட சூழல்களாலும் சுற்றிவளைக்கப்பட்டுள்ள நமது சமூகத்தால் அதற்குப் புறநிலையிருக்கும் தனது தாக்கத்தை மெதுவான முறையில் உள்நுழைக்க முயற்சிக்கும் மிகப்பெரிய – அதிர்ச்சியூட்டக் கூடிய தற்பாலுறவுக் கோட்பாட்டை அல்லது ஒட்டுமொத்த புறநிலையில் இயங்கும் ஙரநநச கோட்பாட்டை எதாவது ஒரு தருணத்தில் உள்வாங்கிக் கொள்ளத் தயாராக இருக்குமா நமது சமூகம் என்பதை நாம் பேசத்தானே வேண்டும்.

மிக மிக அதிகமான பாலியல் இச்சைகளுடனும் மிக அதிகளவாக பெண்களில் விருப்பும் கொண்ட ஒரு ஆண் தனத்திலிருப்பதாக உணரும் கற்சுறாவாகிய நான்- தற்பாலுறவு குறித்தஅரசியலையும் அழகியலையும் அதன் உள்ளும் புறமும் இருக்கின்ற  முரண்பாடுகளையும் நாங்கள் எவ்வாறு விளங்கிக் கொள்ள முடியும், இதற்குள் எவ்வாறு உள்நுழைய முடிகிறது என்றும் பார்க்கும் எனது ஆரம்பநிலை அணுகலே இது.

பொதுவாக தமிழ் இனத்தின்; மானமாகவும் புனிதமாகவும் போற்றப்படுகின்ற ஒழுக்கம் என்ற பாலியல் சார் நடவடிக்கை மீதான கண்காணிப்பு என்பது மிக முக்கியம் வாய்ந்ததொன்று. இந்தப் பாலியல் பற்றிய கவனமென்பதே ஒவ்வொரு தனிநபரையும் அச்சப்படுத்திக் கொண்டிருக்கும் ஒன்றாக வாழ்நாள் ப+ராவும் இருந்து வருகிறது. தனிநபர்களது பாலியல் விருப்பு என்பதை எமது சமூகம் ஒருபோதும் ஒத்துக் கொள்வதி;ல்லை. அதை சமூகத்தின் விருப்பாக  ஒரு இனத்தின் விருப்பாக ஒவ்வொரு தனிநபர்கள் மீதும் திணித்து விடுகிறது. பொதுவாக கல்வி, உடை, உழைப்பு, வேலை மற்றும் அனைத்து விதமான இருத்தல்களையும் விருப்புக்களையும் சமூகத்தின் விருப்பாக நமது சமூகம் கொண்டிருந்தாலும் எதிர்பார்த்தாலும் பாலியல் பற்றிய தெரிவில் அனைத்தையும் மீறிய வன்முறையைச் செலுத்தி தனிநபர் விருப்பை நிராகரித்து விட்டு  இனத்தின் தெரிவாக சமூகத்தின் தெரிவாக முன்நிறுத்தகிறது.

புலம்பெயர் சமூகத்தில் பாலியல் பற்றிய அறிவுடனும் தெரிவின் உரிமையுடனும் நமது குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் பாலியல் பற்றிய மிக நூதனமான கண்காணிப்புக்களிலிருந்து இன்னும் விடுபடவில்லை. இங்கே இந்த இரண்டு பிரிவுக்குமிடையில் வளர்ந்து வரும் மிகப்பெரிய இடைவெளி குறித்து அதற்குள்ளிருக்கும் ஆபத்துக் குறித்து நாம் அவ்வளவு அக்கறைப்படுவதேயில்லை.
அண்மையில் கனடாவில் சாதிமாறிக் காதலித்ததற்காக காரினால் அடித்துத் தன் பிள்ளையைக் கொல்ல முயன்ற ஈழத்தமிழ்த் தகப்பன் பற்றிய சம்பவம் அறிந்திருப்பீர்கள். இதுதான் இன்று 30வருடத்தின் மேலாகப் புலம் பெயர்ந்து வாழும் நமது இனத்தவர்களது மனநிலை. இதற்குள் தற்பாலுறவு குறித்த அறிவு அல்லது புரிதல் எப்படி நிகழும் ? எங்கே சாத்தியம்?
ஆனாலும் நாம் கட்டிவைத்த புனிங்கள் நம் கண்முன்னாலேயே தகர்ந்து போய்க்கொண்டிருக்கும் காலம் இது. அத்தோடு தகர்க்க வேண்டிய காலமும் கூட. மதங்களின் பெயரால் போதிக்கப்பட்ட ஒழுக்கங்களும் விடுதலையின் பேரால் போதிக்கப்பட்ட ஒழுக்கங்களும் நீதியன் பெயரால் போதிக்கப்பட்ட ஒழுக்கங்களும்தகர்ந்து போனதைக் கண்டுகொண்டிருக்கிறோம்.

ஒழுக்கத்தின் பெயரால் போதிக்கப்பட்ட பாலியல்  உறவும் அதன் மீதான கண்காணிப்பும் தகரும் தருணம் தான் அடுத்து நடக்கப்போவது.
தற்பாலுறவு பற்றிய அறிவு எதுவுமற்ற வயதில் அதாவது பதின்மங்களில் எனது கிராமத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்களால்  அவர்களின் பாலியல் இச்சைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறேன். அதாவது சிறிய வயதில் கம்பியடிக்கப்பட்டவன் நான். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் நான்  பேசுகின்ற விடையமும் அதனைப் புரிந்து கொள்ளலுக்கும் இடையே ஊடாடப் போவது இதுதான்.

ஒருபாலுறவு பற்றிய புரிதலின் ஆரம்பகாலங்களில் நானும் மிகக் கொச்சைத்தனமாகவே நண்பர்களுடன் உரையாடியிருக்கிறேன். அதன் மீதான அரசியல் தெளிவற்ற நிலையில் வெறும் பற்றாக்குறையான உடல் சார் இன்பங்களாக மட்டுமே அதனைக் கருதியிருக்கிறேன். உணர்ந்திருக்கிறேன். அதாவது கட்டுப்படுத்தப்பட்ட பாலியல் இன்பங்கள் கொண்ட நமது சமூகத்தில் வசதிப்பட்ட, ஒரு சந்தர்ப்பங் கிட்டிய பாலியல் இன்பங்களாகவே நான் தற்பாலுறவுவை உணர்ந்திருக்கிறேன். அதிகமாக எனது நண்பர்களும் நான் உட்பட அவ்வாறே சிந்தித்திருக்கிறார்கள்.

அதாவது நமது சமூகத்தில் ஆண் நண்பர்களே அதிகம் நெருங்கிப்பழக வசதியிருக்கிறது.  மாணவர்கள் விடுதியாக இருந்தாலும் சரி. இயக்க முகாமாக இருந்தாலும் சரி இதுதான் நடை முறையாக இருந்திருக்கிறது. இங்கே ஒன்றாகப் பழகும் ஆண்கள் ஒருவரில் ஒருவர் பாசம் கொள்ளும் ஆண்கள்-  அல்லது ஒன்றாகவே படுத்து எழும்பும் ஆண்கள் மிகுந்த அன்பாகவும் மற்றவர்களை தொந்தரவுக்குட்படுத்த விரும்பாத தாங்கள் தனிஉலகமாக இருக்க விரும்புகின்ற தன்மையை நாhன் அதிகம் கண்டிருக்கிறேன். தங்களுக்குள் ஆண் தன்மையும் பெண்தன்மையும் கொண்டமைந்த  மிக நளினங்களைப் பார்த்திருக்கிறேன். ஒரு குடும்பமாய் தங்களை உணர்ந்து கொள்ளும் தன்மைகளை அந்தச்சிறிய வயதுகளிலேயே அவர்களிடம் கவனித்தும் இருக்கிறேன்.

பாலுறவு அரசியல் அறிவற்ற அந்தத் தருணங்களில் இருபாலுறவு விருப்பு சார் உணர்வு கொண்ட சமூகத்தில் இவர்கள் மிகுந்த பழிப்புக்கும் அருவருப்புக்கு உட்படுத்தப்பட்டவர்களாயினும் அதில் அநேகர் அதைப் பொருட்படுத்துவதேயில்லை. ஆனால்  அவர்கள் எல்லோருமே பின் நாட்களில் பெண்களைத் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்கள்.  ஆக,  அவர்கள் அனுபவித்த பாலியல் தன்மை என்பது எதைக் குறிக்கிறது.? பற்றாக்குறையான பாலியல் சூழலில் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்ததை பகிர்ந்து கொண்டார்களா? அல்லது தற்பாலுறவில் விருப்பமிருந்தும் சமூகத்திற்காக பெண்களை த் திருமணம் செய்தார்களா என்பதுதான் நாம் யோசிக்க வேண்டியது. இங்கு இன்னும் ஒன்றையும் சொல்கிறேன்.

என்னைச் சிறிய வயதில்  கம்பியடித்தவர்கள் இரண்டு பேருமே திருமணமானவர்கள். அதில் ஒருவருக்கு ஒரு பெண்குழந்தையும் இருக்கிறது. இங்கே திரும்பத்திரும்ப நான் கம்பியடித்ததவர்கள் என்ற சொற்பதத்தைப் பாவிப்பதற்கான காரணம் அந்த உறவுக்கு உரிய சரியான சொல் நமது மொழியில் இல்லை என்பதே. அதனைபுரிந்து கொள்ள அல்லது அந்தப் பாலியல் உணர்வின் வித்தியாசத்தை உணர இந்தச் சொல் அதுவும் மிகக் கொச்சசைத்தனமான இந்தச் சொல்லே தற்போது நம்மிடம் இருக்கிறது.
சரி , பாலியல் அரசியலறிவற்ற காலங்களில் அறிந்து கொண்ட தற்பாலுறவு குறித்த அக்கறை இப்படியிருந்தது எனினும் இன்று உலகம் பூராவும் தற்பாலுறவுக்கான உரிமைக்குரலை சகல தரப்பிலிருந்தும் எழுப்பிவரும் காலத்தில் உலகெங்கும் பரவியிருக்கும் நாங்கள் அதாவது நமது தமிழ் சமூகம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பது அடுத்துப் பேசவேண்டியது.

கனடாவில் வசிக்கத் தொடங்கியதன் பிற்பாடு வருடாவருடம் நடக்கின்ற பிறைட் பரட் க்கு அதிகமான  தடவை சென்றிருக்கிறேன். அந்த ஆக்கிரோசமான அந்தத் தொடரணி ஊர்வலத்தில் வடஅமரிக்க கண்டத்தின் அனைத்து தற்பாலுறவு விருப்பாளர்களும் ஆதரவாளர்களும் பெரும்பாலும் கலந்து கொள்வார்கள். அதனை ஒட்டுமொத்த உலகின் அதிகாரங்களுக்கு எதிரான கோசங்களை முன்வைக்கும் தளமாக – தற்பாலுறவு குறித்த தெரிவின் சுதந்திரத்தை முன்நிறுத்தி மிக  ஆக்கிரோசமாக இருநாட்களும் நடைபெறும். ஆனாலும் பெண்கள் மீதான வன்முறை குழந்தைகள் மீதான வன்முறை எயிட்ஸ் மற்றும் மாபகப் புற்று நோய்கள் போன்ற மிகக் கவனிக்கப்படவேண்டிய மறுசமூகம் பெரும்பாலும் அக்கறை கொள்ளாத விடையங்களை அங்கு முன்நிலையில் வைத்துப் பேசப்படுகிற சூழலை அவதானித்திருக்கிறேன். மிக அதிகமாக பாலியல் தெரிவில் சமூகத்தால்   உபயோகிக்கப்படும் வன்முறை மற்றும் கட்டுப்பட்டித்தனமான விளக்கமளிப்புக்கள் கட்டுப்பாடுகள் ஒழுங்குகள் என்பவற்றைத் தகர்த்தெறியும் நாட்களாக அந்த நாட்கள் இருந்துவிடுகின்றன.
தற்பாலுறவு குறித்து பேசுவதில் அடுத்தது

அவர்கள் பற்றிய அடையாளப்டுத்தல்களில்  அவர்கள் குறித்து நமக்கிடையில் பாவிக்கப்படும் சொற்கள் வார்த்தைப் பிரையோகங்கள் குறித்துப் பேசவேண்டும். உண்மையில் அனைத்திற்கும் தூயதமிழ்சொற்கள் தேடும் நமது சமூகத்திடம் இவர்களை அழைப்பதற்கு ஒரு தமிழ்ச் சொல் இல்லை என்பது வெட்கமானது. வெறும் கொச்சைத்தனமான கேலிக்குட்படுத்தும் அல்லது ஒடுக்கும் சொற்களே வார்ததைகள் எங்கினும் பரவிக்கிடக்கின்றது. GAY என்பதற்கோ அல்லது LESBIANஎன்பதற்கான  தமிழ்ச் சொல் என்னவாக இருக்கிறது என்றால் பொண் ஒருபால் உறவு ஆண் ஒருபாலுறவு என்றுதான் அர்த்தப்படுத்த முடிகிறது.

 QUEER என்பதற்கான  நமது விளக்கமளிப்பு என்னவாக இருக்கமுடியும்?  ஆக இன்று மிக விவாதிக்கப்படக்கூடிய நிலையிலிருக்கும் தற்பாலுறவு நிலை குறித்த உரையாடல்களில் தமிழ் மொழியின் பற்றாக்குறை என்பது அதிகமாக இருக்கிறது என்பதுதான். இங்கே தூயதமிழ்ச் சொல் தேடும் தேசியக் காய்சலில் இதனைச் சொல்லவில்லை. பொதுத் தளத்தில் உரையாடுவதற்கு தமிழ் மொழியினைப் பேசுகின்ற நமது காலாசாரங்களால் தமிழ் மொழியை அடையாளப்படுத்துகின்ற எங்களால் முழுமையடைய உரையாடலைத் தொடரமுடியாது இருக்கிறது என்பதைத்தான் சொல்கிறேன். குறிப்பாகச் சொல்வது  என்னவென்றால் டன்ஸ்ரன் சொல்வது போல் எனது துணையை எனது பாட்ணரை பொதுச்சூழலில் அதவாது குடும்ப உறவுக்குள்அழைப்பதற்கு ஒரு தமிழ்ச் சொல் இல்லை ஒரு உறவுமுறை இல்லை என்பதே  முதற்தவறு என்பதாகும். சித்தி சித்தப்பா பெரியப்பா பெரியம்மா என்பது போல் எமக்கான துணைவரை அழைப்பதற்குரிய சொல் நமது மொழியில் இன்னும் இல்லை என்பது கவனிக்கப்படவேண்டியது. இரகசியமாக அடையாளப்படுத்த வேண்டிய தேவைதான் நமது குடும்பச் சூழல்களில் இருக்கிறது என்கிறார். அதைவிட புயல என்பதற்கு அவர்கள் சந்தோசம் என்று அழைத்துக் கொள்கிறார்கள். pசயனை pயசயன ஐ தேர் என்றும் கொடியேற்றம் என்றும் பொது இடங்களில் குறிப்பிடும் நிலைதான் இன்னும் இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் தான் அவர்கள் சினேகிதன் என்ற அமைப்பு ஒன்றைத் தொடங்கி தற்பாலுறவுக்காரர்களது உரிமைகள் உறவுகள் குறித்த அக்கறையுடன் செயற்பட்டு வருகிறார்கள்.


தற்பாலுறவு பற்றிய அறிவின் பற்றாக்குறையும் விளக்கமின்மைக்கும் அப்பால் தற்பாலுறவுக்காரர்கள் மீது நமது சமூகம் தனது ஒடுக்குதலை வெளிப்படையாகவே நிகழ்த்திய சம்பவங்கள் மிக அண்மைக்காலங்களில்  இலங்கையிலும் கனடாவிலும் நிகழ்ந்தன.
கனடாவின் முக்கிய வானொலிகளில் ஒன்றான சிரிபிசி வானொலியில் கொடுக்கப்பட்ட விளம்பரம் ஒன்றைப் கேட்டிருப்பீர்கள். ரொரன்ரோ மேஜர் தோர்லில் வேட்பாளராக நின்ற சிமிதர்மன் என்பவரை தற்பாலுறவுக்காரர் என்பதற்காக மிகக் கொச்சைத்தனமாகக் கிண்டலடித்திருந்தார்கள். அதுபற்றி வெளிப்படுத்திய எந்தவித எதிர்ப்புணர்வுகளுக்கும் இன்றுவரை பதிலளித்ததி;ல்லை. கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் என்ற அடையாளத்துடன் கொடுக்கப்பட்டாலும் அவ்விளம்பரம் குறித்த பொறுப்பு அது சுட்டும் கருத்துக் குறித்து அவர்கள் கிஞ்சித்தும் கவலைப்பட்டது கிடையாது.
விளம்பரம் போட்டுக் காட்டவேண்டும்.
இரண்டாவது, ஈழத்து முக்கிய எழுத்தாளரும் நாவலாசிரியரும் கூர் பத்திரிகை ஆசிரியருமான தேவகாந்தன் அவர்கள் டிசம்பர் தாய்வீடு பத்திரிகையில் தற்பாலுறவுக்காரர்கள் குறித்து படு கேவலமான பத்தியொன்றை எழுதியிருந்தார்.
எனக்குப் பிடித்தமான பழைய ஆங்கிலப்பாடல்களில் ‘I love you more than I can say’என்ற லியோ சேயரின் பாடலும் ஒன்று. லியோசேயர், காதலின் நுண்மையின் ரகசியக் கூறுகளை அந்த ஒரு பாடலிலேயே வெளிப்படுத்திவிட்டதாக நான் பரவசம் கொண்டிருந்தேன். அதனாலேயே லியோ சேயர் ஒரு கதாநாயகப்பாடகன் நிலைக்கும் உயர்ந்திருந்தார். ஆனால் அவர் ஒரு தற்பாற் புணர்ச்சியாளர் என அறிந்தகணமே நான் அளித்திருந்த அந்த உயர்ந்தபீடம் அரை நொடியில் சிதறிப்போனது.
என்கிறார்.

இந்த அனுதாபங்களும் பிடித்தங்களும் என்கருத்துநிலை சார்ந்தவை என்றபோதிலும், இது தனிமனிதப் பிரச்சினை மட்டுமில்லை, சமூகப்பிரச்சினையும்தான் ஆகும் என்ற புரிதல் எனக்கு இருக்கிறது. அதனால் விபசாரர்கள், குற்றவாளிகள்,அரவாணிகள்போல தற்பாற் புணர்ச்சியாளர்களை எளிதில் என்னால் வரவேற்றுவிட முடியாதிருக்கிறது. அது ஒரு தனிமனித பிரச்சினையே எனினும், அதையும் மீறிஅது ஒரு தனிமனித வக்கிர நிலையை அடைந்துவருவதால்,இது சமூகப் பிரச்சினையும்தான் ஆகின்றது என்பதே என் திடமான கருத்து.
நிலப்பிரபுத்துவத்தின் அம்சமாக இருந்த கூட்டுக்குடும்ப வாழ்முறை முதலாளியத்தின் வருகையோடுதான் சிதறியது. அது நல்லது. முன்னேற்-றமானதும்கூட. ஆனாலும் தனிக் குடும்ப வாழ்முறைக்கான அதி உச்சபட்ச விதிகளைவகுத்தது மேலைத் தேசம். இன்று தற்பாற்புணர்ச்சியையும் அது தனிமனித சுதந்திரமென்கிற திரையின் பின்னணியாகவே முன்-மொழிகிறது.தற்பாற் திருமணத்தை அங்கீகரித்த நாடுகளில் இரண்டாவதானது கனடா. அது நல்லது. அந்தளவுதான் அந்த விவகாரத்தில். சமூகஅக்கறை அதை எதிர்க்கிற அளவு செல்லவேண்டியதில்லை. அதை தனி மனிதர்களின் விருப்புச் சார்ந்த ஒரு விஷயம்மட்டுமாக எடுத்துக்கொண்டு ஒதுக்கிவைப்பதுதான் விவேகம்.ஆனால் அதை ஒரு வாழ்முறையின் அம்சமாகப்பிரச்சாரப்படுத்துவது

போன்ற எந்தமுயற்சியையும் எதிர்ப்பதைவிட இதில் ஒருஜனநாயக முற்போக்குவாதிக்கு வேறு வழியில்லை.
அது விபச்சாரம்போல் மிகப் புராதனமானது.சுயவின்பத் திருப்திப்படுதல்போல் உயிரின இயல்பானது. ஆனாலும் விபச்சாரத்தில் ஒருசமூக அநீதியின் கூறு ஒட்டிக்கொண்டிருக்கும். சுயவின்பதாரியிடம் தேக, மன அடக்குதல்களின்விடுபடுதல் என்ற முத்திரை இருக்கும். தன்பாற் புணர்ச்சியாளரிடத்தில் மனோவிகாரத்தின்கூறுமட்டுமே காணக்கிடக்கும். என்கிறார்.

பாருங்கள் இந்தப் பத்தி தெரிவிப்பதை. நாம் மிக மதிப்பளிக்கும் ஒரு எழுத்தாளன். கனவுச் சிறை கதாகாலம்  என்று ஈழத்துப் படைப்பிலக்கிய ஆழுமை கொண்ட ஒரு ஈழத்துச் சமகால எழுத்தாளரது கருத்து. இது. எவ்வளவு ஒரு பிற்போக்குத்தனமாக இருக்கிறது பாருங்கள்.
தற்பாலுறவு என்பது ஒரு மனநோய் என்ற வாதம்  19ம் நூற்றாண்டுகளிலேயே தவறு என்று கைவிடப்பட்ட, நிராகரிக்கப்பட்ட கூற்று. இன்று தற்பாலுறவு என்பது மரபணுவில் இருக்கிறது என்றும்  அது பழக்கத்தாலோ அல்லது பாதிப்பக்களாலோ உருவாவதில்லை என்றும் நீரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தக்காலத்தில் தேவகாந்தன் அவர்களது கூற்று அப்பட்டமான தேடலற்ற அறியாமையின் வெளிப்பாடு என்று புறந்தள்ளிவிடமுடியாது. இதுதான் ஒரு சாதாரண தமிழ் மனத்தின் இன்றைய நிலைப்பாடாகவும் இருக்கிறது.அவருக்கு லியோ சேயர் தற்பாலறவுக்காரர் என்று தெரிந்ததும் அவர்மீது தான் வைத்திருந்த உயர்ந்த பீடம் அரை நொடியில் சிதறிப் போனதற்கும் சிமிதர்மான் தற்பாலுறவுக்காரராக இருப்பதாலேயே ரொரண்ரோ மேயராக வரத்தகுதியற்றவர் என்று சொல்லும் சிரிபிசியின் விளம்பரத்திற்கும் ஒரு வேறுபாடுமி;ல்லைத்தானே.
அடுத்து இலங்கையில்,

1883 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சட்டவிதிகளிலேயே முதன் முதலில் ஒரு பாலுறவு தடை செய்யப்பட்டு தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கப்பட்டது. பிரித்தானிய காலனித்துவ சக்திகள் தமது ஆட்சியிலேயே அந்தச் சட்டத்தை உருவாக்கினார்கள். இன்று ஒருபாலுறவு தண்டனைக்குரிய குற்றம். அது இயற்கைக்கு முரணானதாம். இலங்கை குற்றவியல் சட்டத்தின் 365ஆவது பிரிவின் பிரகாரம் இதற்கு 12 வருட சிறைத்தண்டனையும் கசையடியும் தண்டனையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஒருமுறை நடந்த பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது  அமைச்சர் மங்கள சமரவீர மீது தற்பாலுறவுக்காரர் என குற்றம் சுமத்தப்பட்டது. தொடர்ந்து  ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன மேற்படி சட்டத்தின் பிரகாரம் அவர் தண்டனைக்குரியவர் என்று கூறினார்.

ராஜித்த சேனாரத்ன பொதுவாகவே  எல்லா இடங்களிலும் ஒருபாலுறவு குறித்து மோசமான கருத்து தெரிவித்து வந்தார்
யுக்திய பத்திரிகைக்கு அவர் வழங்கியிருந்த பேட்டியொன்றில்..
நான் ஒருபாலுறவை கடுமையாக எதிர்க்கிறேன். இதற்கென்று இருக்கின்ற நிறுவனங்களில் அரசாங்கத்தைச் சேர்ந்த இரு அமைச்சர்மார் உள்ளனர். இந்த நிறுவனங்களுக்கு அரச அனுசரணை கிடைக்கிறது. இதன் மூலம் நாடு முழுவதையும் (SexClub) பாலியல் சமூகமாக ஆக்கப் பார்க்கின்றனர். 2500 வருடகால பாரம்பரிய கலாசாரமுடைய இந்த சிங்கள பௌத்த நாட்டை அழிக்கப் பார்க்கின்றனர். இதனைக் கேட்டுக்கொண்டு மகா சங்கத்தினர் அமைதியாக இருப்பது என்னை ஆச்சரியமூட்டுகிறது. நான் கற்றிருக்கின்ற வைத்தியத்துறையைப் பொறுத்தவரை ஒருபாலுறவு என்பது மனநோயின் விளைவு. மனநோயாளர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும். அவர்களை புனருத்தாரனம் செய்ய வேண்டும். அதற்கு மாறாக அதனைப் பேண ஜனநாயக உரிமை வழங்குவதை நான் எதிர்க்கிறேன். எமது குடும்ப கட்டமைப்பை சீரழிக்கிற இயற்கைக்கு முரணான விடயத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது. பைத்தியக்காரத்தனமான சுதந்திரத்தை கதைத்துக்கொண்டு இதனை செய்ய முயல்வதை நான் இறுதி வரை எதிர்த்தே தீருவேன்
என்றார். (யுக்திய செப்டம்பர் 06)

இதனை மறுத்துக் கருத்துத் தெரிவித்த சேர்மன் டி ரோஸ் அவர்கள்
ஒருபாலுறவினர் என்கின்ற ரீதியில் நாங்கள் அமைப்பொன்றை உருவாக்கியதே அதற்குரிய உரிமையை ஏற்கச்செய்வதற்காகவே. அரசியல் நே?க்கங்களுக்காக பாலியல் உரிமையை பலியாக்கியுள்ளனர். ஒருவருக்கு இந்த உரிமையை ஏற்காதிருக்க உரிமையுண்டு. ஆனால் நாகரிகமான ஜனநாயக முறையியல் என்று ஒன்று உண்டு. ஒருவர் ஒருபாலுறவு கொண்டதற்காக அவர் ஒருபாலுறவினர் என ஆகிவிடமாட்டார். அதற்கு பல காரணங்கள் உண்டு. இது தெரிவைப் பொறுத்தது. இலங்கையில் ஆயிரக்கணக்கான ஒருபாலுறவினர் உள்ளனர். அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருபவர்கள். ராஜித்தவின் கருத்தானது அந்த ஆயிரக்கணக்கான அனைவருக்கும் எதிரான தாக்குதல். இந்த மோசமான கருத்து குறித்து மக்கள் முன்னிலையில் ராஜித்த பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். என்றார். எங்களுக்குத் தெரியும் அனுரா பண்டார நாயக்காவுக்கு இருந்த ஒருபாலுறவு நண்பர் குறித்த அரசியல் விவகாரங்கள். இன்று ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தற்பாலுறவுக்காராக இருக்கிறார். ஆனால் இவர்கள் குறித்த எதிர்ப்புணர்வு அவர்கள் மட்டத்தில் பொதுவாக வெளிவருவதில்லை.

இப்போது பார்த்தீர்களென்றால் சிங்களவர்களாயிருந்தாலும் சரி அது தமிழர்களாக இருந்தாலும் சரி தற்பாலுறவை ஒரு மனநோயின் விளைவு என்ற புரிதலோடு மட்டும் தான் அணுக நினைக்கிறார்கள். இதனை எதிர்ப்பவர்கள் அதற்குமப்பால் தமது தேடலை மேற்கொள்ள மறுதலிக்கிறார்கள். உடலியலின் கூறுகளை அதன் அரசியலை அழகியலை புரிந்து கொள்வதின் அவசியம் பற்றிக் கூட இவர்கள் யோசிப்பதில்லை. தமது மதங்களினூடும் தமது தேசியங்களினூடும் தமது கலாச்சாரங்களினூடும்  கட்டிவைத்திருக்கும் சீர் கேட்டை யாருக்கும் குலைக்க விருப்பமி;ல்லை. ஆக மற்றவர்களது பாலியல் தெரிவிலும் தமது மூக்கை நுழைத்து விட்டு அரசியல் செய்வார்கள் இவர்கள்.

தற்பாலுறவுக்காரர்களிடம் எப்பொழுதும் எதிர்ப்பாலுறவுக்காரர்கள் குறித்து அச்சமும் அவநம்பிக்கையும் தொனித்துக் கொண்டிருக்கிறது. தம்மீதான புறக்கணிப்புக்களை அவர்கள் நிதமும் அனுபவித்து வருபவர்களாகையால் ஒரு நிரந்தர இடைவெளி ஒன்று எப்பொழுதும் அகலமாகவே இருந்து வருகிறது. பெண்தன்மை எதிர் ஆண்தன்மை என்ற இரு எதிர் வாழ்நிலைகளுக்கிடையில் ஆணாகிப் பொண்ணாகுதல் அல்லது பெண்ணாகி ஆணாகுதல் என்பதை ஒருபொழுதும்  ஒத்துக் கொள்ளப் போவதில்லை.  -ஸ்ரெயிட் பீப்பிள்ஸ்- என்று தற்பாலுறவுக்காரர்களால் அழைக்கப்படும் எதிர்ப்பாலுறவுக்காரர்கள் பற்றிய அவர்களது கதையாடல்கள் எப்பொழுதும் எதிர்மறையாவே இருக்கின்றன. அறிவின்மையானவர்கள்,சிந்திக்கத் தெரியாதவர்கள், அரியண்டமானவர்கள், மாற்றத்தை விரும்பாதவர்கள், புதியன சிந்திக்கத் தெரியாதவர்கள் என பலவகை அடைமொழிகளுடனேயே அழைக்கப்படுகிறார்கள். ஆக ஞரநநச என்று தங்களை அழைக்கும் இவர்கள் பொதுச் சமூகத்தின் புறநிலையாளர்களாய் உணர்ந்து கொள்வதோடு சமூக மாற்றத்தின் முன்நிபந்தனையாக தம்மையே முன்வைக்கிறார்கள். தமது உடலையே முன்நிறுத்துகிறார்கள்.

கடந்த இரு பன்முகவெளி நிகழ்வுகளிலும் உரையாற்றிய டன்ஸ்ரன் அவர்கள் உங்கள் பிள்ளைகள் தற்பாலுறவுக்காரர்களாக அடையாளம் கண்டீர்கள் என்றால் உங்கள் முடிவு என்னவாக இருக்கும் என்க கேட்டபொழுது தாம் அதனை ஏற்கமாட்டோம்; என்பதாகவும் தாம் தாங்க முடியாத மன வேதனைக்குள்ளாவோம் என்பதாகவும்  பலரது கருத்து இருந்தது. இங்கு கவனிக்க வேண்டிய விடையம் என்னவென்றால் நாம் விரும்பும் நாம் செய்யும் பாலியல் நடைமுறை சரியானது எனவும் நமக்கு விருப்பமற்றது தவறானது எனவும் சிந்திக்கத் தோன்றுவது எவ்வாறு? அந்தச்சிந்தனை எங்கிருந்து தொடங்குகின்றது. இது வெறுமனே தமிழர்களிடம் மாத்திரமல்ல. ஐரோப்பிய நாட்டவர்களிடமும் கனடிய அமெரிக்க நாட்டவர்களிடமும் இதே எண்ணம் தொடர்ந்து இருக்கிறது. எதிர்ப்பால் விருப்பமுள்ள எல்லா இனத்தவர்களாலும்  ஜீரணிக்க முடியாத விடையமாகத்தான் தற்பாலுறவு இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது. இதற்குள்ளிருந்துதான் இவர்களது சாத்தியங்களை நகர்த்த வேண்டியிருக்கிறது. கனடிய அரசின் அங்கீகாரம் கிடைத்தாலும் கூட இன்னமும் ஏதோ ஒரு மூலையில் இருந்து ஒழித்துதத்தான் வாழ்வை ஓட்டவேண்டியிருக்கிறது.

இறுதியாக,

நாம் இவ்வாறு முக்கியம் கொள்ளும்- ஒடுக்கப்பட்ட சமூகமாக கருதும்- தற்பாலுறவு சமூகம் தன்னளவில் அல்லது தனக்குள் எவ்வாறு இயங்கிக் கொள்கிறது என நாம் பார்க்கவும் வேண்டும்.
நாம் அணுகும் சமூகத்தின் சிஸ்ரம் என்பது அதாவது அதிகாரப் படிநிலை என்பது ஆண் அதிகாரப் படிநிலை. கட்டப்பட்ட அனைத்து சமூகமும் ஆண் தன்நிலை அதிகாரம் சார்ந்தே இயங்குகின்றது. என்பதை நிங்கள் அறிவீர்கள்.  அதாவது முதல் ஆண் இருப்பினது மையம் குறித்தே  அதன் அக்கறை குறித்தே இது இயங்குகின்றது. அது எந்த சமூகமாக இருந்தாலும். இதுதான் நிலை. இதில் வர்க்கம்  இனம் சாதியம் பாலியல் நிறம் என்பன பிரிவுகளாக இருந்தாலும் முன்நிலையில் இருப்பது ஆண் மையச் சிந்தனையே. இந்த அடிப்படையில் தான் தற்பாலுறவுச் சமூகமும் தன்னை வடிவமைத்துக் கொண்டுள்ளது. மிக எளிமையான கண்ணோட்டத்துடன் Pசயனை  pசயனஐப் பார்த்தோமானால் சுலபமாக விளங்கிக் கொள்ளமுடியும். நான் முன்னம் சொன்னது போல் ஆக்கிரோசமான தொடரணி ஊர்வலங்களும் உலக அரசியலும் குழந்தைகள் மீதான அக்கறையும் பெண்களது உடல் உள அரசியலைப் பேசுகின்ற நாளாக ஊர்வலத்தின் முதல்நாள் லெஸ்பியன்களது நாளே இருக்கும். இரண்டாம் நாள் மிக கோலாகலமான அதிக வியாபார நிறுவனங்களது ஸ்பொன்சரின் கீழ் ஆடம்பர நிகழ்வாக மாற்றப்பட்ட தற்பாலுறவு ஆண்களது நிகழ்வு இருக்கும். உலகச் சூழலை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் தெரியும் தற்பாலுறவு அரசியலுக்கு சம்பந்தம் இல்லாத நிறுவனங்கள் கூட அங்கே தமது றேட் மார்க்கை முன்வைத்து வியாபாரம் செய்து கொண்டிருப்பார்கள். தற்பாலுறவுக் கொடியின் வானவில் நிறத்தைப் பொறித்த ஆடைகளும் அலங்காரப் பொருட்களுமாக வியாபாரம் முன்நிலை பெற தற்பாலுறவு உரிமை அரசியல் காணாமல் போய்க் கொண்டிருக்கும். இந்தமுறை ஊர்வலத்தில் கனடியத் தமிழ்க் காங்கிரசும் பங்குபற்றியது என்றால் பாருங்களேன்.

மிக நுணுக்கமாகப் pசயனை pயசன ஐப் பார்தால் தெரியும் அதற்குள் இருக்கும் உட்பிரிவுகள். ஒரு தற்பாலுறவுக்காரர் என்பவர் அழகானவராக  துப்பரவான ஆடையணிந்த  சாதுவான நபராக இருப்பார் என்பது பொதுவாக நாம் அறிந்து வைத்திருப்பது. மாறாக மீடியாக்களில் தற்பாலறவுக்காரர்களை வெளிப்படுத்தும் போது விகாரமான வித்தியாசமான ஆடை அணிந்த ஒரு முரட்டுக் கோணத்தில் தலை வாரப்பட்ட நபர்களைப் பிரசுரிப்பதைப் பார்த்திருப்பீர்கள். சாதாரண  பொதுவான சாயலில் இருப்பவர்களை தற்பாலுறவுக்காரர்கள் என்று ஒருபோதும் எந்த மீடியாவும் பிரசுரித்ததில்லை. தற்பாலுறவுக்காரர்கள் என்பவர்கள் இந்த உலகத்திற்குப் புதிதானவர்கள் என்பது போலவே அடையாளப்படுத்தல்கள் தினமும் நிகழுகின்றன.
pசயனை ஊர்வலத்திலும் அதிகாரங்களை முதல்நிலையில் வைத்திருப்பவர்கள் படித்த துப்பரவான ஆண் தற்பாலுறவுக்காரர்களே. அவர்களே தற்பாலுறவு அடையளச்சின்னமாக இருப்பவர்கள். அதனால் அவர்கள் உலக அரசியலையோ அல்லது வேறு ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்த அரசியலையோ பேசுவதில்லை. தமது தகமையைத் தக்கவைக்க வெறும் வியாபாரம் சார்ந்தே அதிகமாக அகக்றைகொள்வார்கள். இவர்களை நிராகரித்தே தற்பாலுறவுப் பெண்களும் மற்றும்  இதர அடித்தட்டுத் தற்பாலுறவுக்காரர்களும் போட்டி போட வேண்டியிருக்கிறது. துப்பரவான படித்த ஆண்களை விலத்தி  நிர்வாணத்தை முன்நிறுத்தும் தற்பாலுறவுக்காரர்களும் (வுரூவு) மற்றும் ளுரூஆ -  போன்றோர்கள் தமது அரசியலை எப்போதும் முன்நிறுத்திப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் தற்பாலுறவைப் பற்றியே பேசமறுக்கின்ற நமது சமூகம் தற்பாலுறவுக்காரர்களுக்குள் இருக்கின்ற மறுதலைச்சிக்கல்கள் குறித்து விளங்கிக் கொள்ளப் போவது நடக்கின்ற காரியமல்ல. இதையும் தாண்டி வசயளெநஒரயட   என்பவர்களது வாழ்வு அவர்களது சிக்கல்கள் குறித்து நாம் பேசவிளைவது எப்போது? நேற்றுவரைக்கும் அவன் என்று விழித்த ஒருவரை இன்று அவள் என்று விழிக்கவேண்டிய காலங்களில் வாழ்கிறோம் இந்த உணர்வுகளை வாழ்வு முறையை விளங்குதல் எப்போது நிகழும். அதற்கான தயார்படுத்தல்களை நாம் எங்கிருந்து தொடங்குவது? மற்றவருடைய பாலியல் விருப்பை அல்லது தெரிவை தனதாகவும் தன் சமூகத்தின் விருப்பாகவும் கருதி அதனைக் கண்காணிக்கும் மிக ஆபத்தான சிந்தனையைத் தவறவிடாத நமது சமூகம் தற்பாலுறவு பற்றி மிக அச்சத்துடனேயே காலங்கழிக்கும்.