Saturday, 8 November 2025

ஒன்றின் சுயத்தை தெரிந்தே இல்லாது செய்யும் கூட்டாளிகள். சோபாசக்தியும் நீலகண்டனும்.

 

ஒன்றின் சுயத்தை தெரிந்தே இல்லாது செய்யும் கூட்டாளிகள்.

சோபாசக்தியும் நீலகண்டனும்.

இன்று நடைபெற்ற நூல் வெளியீட்டில் அடையாளம் காட்டிப் பேசஇருந்த பதிவு இது.





ஈழத்தின் தமிழ்ப் பகுதிகளில் யுத்தம் தொடங்கிய காலத்திலிருந்து யுத்தம் முடியும் தருவாய் வரை படுகொலைகள் நடக்காத, நகரங்கள் இல்லை.   கிராமங்கள் இல்லை.  ஒரு தனித்த வீதி கூட இல்லை. 

ஒவ்வொரு வீதிக்கும் ஒரு கொலை அனுபவம் உண்டு. 

ஒவ்வொரு நகருக்கும் - கிராமத்திற்கும் பல கொலை அனுபவங்கள் உள்ளன. 

நம் ஒவ்வொருவருக்குள்ளும் பல்வேறு கொலை அனுபவங்கள் உள்ளன.  நாங்கள் பல்வேறு வகைப்பட்ட கொலையாளிகள் வாழ்ந்த காலத்தில் கூடவே வாழந்து இருந்திருக்கிறோம். இதனை நீங்கள் யாரும் மறுக்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன். 

இந்தக் கொலை அனுபவங்களை  நாம் எதாவதொரு வகையில் வரலாற்றில் பதிந்து செல்ல வேண்டும் என்பது நம் முன்னுள்ள மிக முக்கியமான கடமையே. எமக்கிருக்கும் மிதமான காலங்களை ஒப்பிடும் பொழுது நாம் அதனை மிக வேகமாகச் செய்து விட வேண்டும் என்பதும் அனைத்தையும் விட  முக்கியமானது. 

வெலிக்கடைப் படுகொலை என்று ஈழவிடுதலைப் போராட்டத்தை உந்தித்தித் தள்ளி - வீறு கொள்ளத்  தொடங்கிய கொலைக் கலாச்சாரம் ஈழத்தின் ஒவ்வொரு தெருவிலும் நடந்து முடிந்தது என்பது நமக்கு பெரும் அனுபவம். 



ஹென்பார்ம் படுகொலை

டொலர் பார்ம் படுகொலை 

குமுதினிப் படுகொலை

ஹபரணைப் படுகொலை

வீரமுனைப் படுகொலை

அல்லைப்பிட்டிப் படுகொலை

கந்தன் கருணைப் படுகொலை

நவாலிப் படுகொலை

குருக்கள் மட்ம் படுகொலை

காத்தான் குடிப்படுகொலை

தமிழகத்தின் சவுக்கந்தோப்புப் படுகொலை

சாவகச்சேரி சந்தைப் படுகொலை

அம்பாறைப் படுகொலை

கோண்டாவில் டிப்போ படுகொலை

பிரம்படிலேன் படுகொலை 

என்று  எண்ணற்ற பெயர் அறியப்பட்ட படுகொலைச் சம்பவங்கள் மட்டுமல்ல பெயரற்ற பெரும் படுகொலைச் சம்பவங்கள் ஈழத்தில் ஆயுதம் கொண்டலைந்த அத்தனைபேராலும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் சாத்தியப்படுபவர்களால் தக்கபடி ஆவணப்படுத்தப்படவே வேண்டும். 

அந்த வகையில் இன்று சோபாபாசக்தி அவர்கள் செய்திருப்பதனை நான் வரவேற்றாலும், 

அவரின் கடந்த கால எழுத்துச்  செயற்பாடுகளின் மீதான பார்வையில் இந்த ஆவணப்படுத்தல் மீது எனக்கு மிகப்பெரியதொரு  அச்சம் தோன்றிவிடுகிறது. கடந்த காலங்களில் அவருடைய எழுத்துச் செயற்பாடுகளை நான் அவருடனான எனது நட்பு நிலையிலிருந்து அணுகாது மிகவும் கறாரக ஒவ்வொரு தடவையும் விமர்சித்து வந்திருக்கிறேன்.

அதற்குள் ஒரு பொய்மை எப்பொழுதும் துளிர் விட்டே இருந்திருக்கிறது என்று சுட்டிக்காட்டியிருக்கிறேன். 


அவருடைய முதல் நாவலான  கொரில்லா நாவல் அறிமுகக் கூட்டத்தில் நான் உரையாற்றினேன். அவரது அந்த நாவலை, அக்காலத்தில் வெளிவந்திருந்த ஹேராம் திரைப்படத்துடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தேன். அவ்வளவு பித்தலாட்டம் கொண்ட நாவல் அது. ஒரு எழுத்து முயற்சியின் ஆரம்பம் என்றாலும் அங்கே எழுதப்பட்டிருந்த - கையாளப்பட்டிருந்த வார்த்தைகள் மிகவும் தந்திரமானவை. யுத்தத்திற்குள் இருந்து வெளிவந்த என்னைப் போன்றவர்களால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது.


அதன் பின் அவரது “தேசத்துரோகி”  என்ற சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது.  அதற்கும் நான் எனது எதிர்வினையை வெளிப்படையாக ஆற்றியிருந்தேன். அப்போதும் அவர் என் நண்பர்தான் . இன்று அவர் என்னைத்  தனது நண்பன் இல்லை என்று சொல்லும் மனநிலை உள்ள காலம். 

அக்காலத்தில் அவரின் தேசத்துரோகித் தொகுப்புக் குறித்து அவருடனான  “கணக்குத் தீர்ப்பு” என்ற ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். எங்களோடு சேர்ந்தியங்கியபோது அவர் எவ்வாறான கொள்கையிலிருந்தார். என்னவெல்லாம் சொன்னார்.எதனையெல்லாம் மறுதலித்தார் என்று விளக்கி அவர் தனது தேசத்துரோகி சிறுகதைத் தொகுப்பினை  வெளியிடும் போது என்ன மனநிலையிலிருந்தார் என்று ஆதாரபூர்வமாகச் சொல்லி அவருக்கான கணக்குத் தீர்ப்பினை 2003 இல் எக்ஸில் இதழில் எழுதினேன். 

தமிழ் நாட்டுக் காரர்களுக்குக் காதில் பூ சுற்றிவிடும் மனநிலையில் அவரது எழுத்து இருந்ததை அதில் வெளிப்படையாகச் சுட்டிக் காட்டினேன். தமிழ் நாட்டு வாசகர்களை மட்டும் மனதில் நிறுத்திக் கதை சொல்லும் மனநோய் கொண்டவராக மாறிப் போவிட்டார் என்றும் அதற்கால வலிந்து எழுத்பட்ட கதைகளைக் கொண்டதே தேசத்துரோகி என்ற தொகுப்பு என்று அடையாளம் காட்டினேன்.



அண்மையில் கூட அவரால் வெளியிடப்பட்ட “கருங்குயில்” என்ற சிறுகதைத் தொகுப்பு ஒரு “கோர்த்துக் கட்டி” செய்யும் வேலை. அது சிறுகதையாளன் செய்ய வேண்டியதில்லை என்று அடையாளம் காட்டி மிக விபரமாக அபத்தம் இதழில் எழுதியிருந்தேன். வருடம் ஒரு புத்தகம் போடவேண்டும் என்ற மனப்பான்மையில் சமூகத்தில் பிரபலமாகப் பேசப்பட்ட சம்பவங்களைக் கோர்த்துக் கதை கட்டும் தொழிலாகச் சிறுகதை எழுத்தை அவர் மாற்றி விட்டிருக்கிறார். இதனை ஒரு வியாபாராமாக முன்வைக்கிறார். என்று அவரை ஒரு கோர்த்துக் கட்டி என்று அடையாளம் காட்டியிருந்தேன்.

அதனை விடவும் “அண்ணா 100” என்ற தமிழக அரசால் நிகழ்தப்பட்ட நிகழ்வின் மேடையில்  எவ்வாறெல்லாம் புகலிடச் சூழல் பற்றிப் பொய் பேசினார் சோபாசக்தி என்று விளக்கமாக நான் அதே அபத்தம் இதழில் எழுதியிருந்தேன்.  தன் அடையாளத்தை மட்டும் முன்நிறுத்தச் சொல்லப்பட்ட பொய்கள் அவை. ஒரு எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய கரிசனை இல்லாத தருணம் அது. அங்கே நமது செல்வம் அண்ணையும் இருந்தார் என்பதும் அவரும் அந்த மேடையில் பேசினார் என்பதும் இங்கே குறிப்பிட்டுச்  சுட்டிக்காட்டப்பட வேண்டியது.


மேலும்,   சோபாசக்தி அவர்கள்  அவுஸ்ரேலியாவில் ஒரு கூட்டத்தில் பேசிய ஒரு விடத்தையும் அங்கே சுட்டிக் காட்டியிருந்தேன்.

வேதனையில் வாழ்பவர்கள் வேதனையில் தான் வாழவேண்டும் என்பதில்லை சாதனையிலும் வாழலாம் என்று தான் பள்ளிப் பருவத்தில் எழுதிய தன்னுடைய சொந்த  நாடக வசனத்தை  மாற்றித் தனது நாடக நண்பர்கள் மேடையில் 

வேலணையில் வாழ்பவர்கள் வேலணையில் வாழ வேண்டும் என்பதில்லை சரவணையிலும் வாழலாம் எனச் சொன்னதாகச் சொல்லிய பொழுது அங்கிருந்த அனைவரும் சிரித்தார்கள். 

 இது “மயிரவிட்டான் சிங்கன்” போன்ற ஒரு பொதுமையான நாடக நகைச்சுவை என்பது உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினன்கிறேன்.  இதனைக் கூட அங்கிருந்தவர்களால் புரியவில்லை. அந்த அறிவினைக் கூட பெறாதவர்கள் அவர்கள். ஆக,  முன்னால் கதை கேட்டுக் கொண்டிருப்பவர்கள் யாரென அறிந்து தன்னை முன்நிறுத்திக்  கதையளக்கும் சிறந்த கதை சொல்லி சோபாசக்தி. இதுதான் சோபாசக்தி அவர்கள் தன் மீது கட்டும் விம்பச் சாயல். இது ஒரு சிறிய உதாரணம். 


சமூகத்தில் இருக்கும் பொதுவான விடயத்தை தன்னோடு இணைத்து வெளிக்காட்டித் தனக்கான  மதிப்பேற்றிவிடும் மலினமான செயற்பாட்டின் வடிவம். எல்லாப் பொதுமைகளையும் தனக்காக மாற்றித் திட்மிடும் தற்குறி மனநிலை நன்கே வாய்த்தவர் சோபாசக்தி என்று வெளிப்படையாக அடையாளம் காட்டி எழுதியிருந்தேன்.

 இன்றுள்ள பலர் இதனை அறிந்திருந்தாலும் வெளிப்படையாகப் பேசத் திராணியற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது கவலை.



ஆனால் ஒரு சமூகத்தில் பொதுமையாக ஊலாவும் கதையம்சத்தைத் தன்னோடு இணைத்துப் பகிரும் தற்குறித் தனம் மிகவும் அசிங்கமானது.

இவ்வளவு அசிங்கமாகத் தன் அடையாளத்தை வடிவமைப்பவரது இந்தலெய்டன் தீவு- மண்டைதீவு ஆவணப்பதிவு என்ற எழுத்து மிகவும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கப்பட வேண்டும் என்று சொல்லி நிற்கிறேன். 

இதனை உணர்ந்தே இந்த வெளியீட்டு அறிவிப்பு வெளிவந்தவுடன் காலம் செல்வம் அண்ணன் அவர்களுக்குப் போன் செய்து அண்ணே  நான் இந்தப் புத்தகம் குறித்துப் பேசவா என்று கேட்டேன். அவர் அது சாத்தியமில்லை என்றார்.

அவருடைய தந்திரங்களையும் மந்திரங்களையும் நன்கு அறிந்தவன் என்ற ஒரு காரணத்தினாலோயே நான் பேசுவதற்கு விரும்பினேன்.

ஆகையினால் இதன் பின்னாலிருக்கும் வெளியீட்டு அரசியலைப் பற்றிப் பெச வேண்டும். சொல்லவேண்டும் எனஎண்ணினேன்.




மேலும்  


தமிழ் நாட்டில் கருப்புப் பிரதிகள் என்ற ஒரு பதிப்பகத்தை தன் வசம் வைத்துக் கொண்டு புகலிட இலக்கியத்தை தான் விரும்பும் அடையாளமாகக்  காட்ட முனைவது  சோபாசக்தியின் இன்னொரு அயோக்கியத் தனம் என்று நான் என் அனுபவங்களுக் கூடாகச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். 



அதற்கு மிகச் சிறந்த உதாரணம் இமிழ் என்ற 52வது இலக்கியச் சந்திப்புத் தொகுப்பு.  அந்த இமிழ் என்ற தொகுப்பு வெளிவந்த வழியினை நீங்கள் விளக்கமாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு கூட்டு வேலைத் திட்டமாக- ஒரு இலக்கியச் சந்திப்பு மலராக வெளிவந்த அந்தத் தொகுப்பினை தன் அடையாளத்துடன் மட்டும் வெளிக்காட்டி அதனைத் தன்னுடையதாக ஆக்கிய மிக்ப்பெரும் முட்டாள்த்தனத்தைச் செய்தவர் இவர். இலக்கியச் சந்திப்பில் வெளியிட முன்பே தமிழ் நாட்டில் அது தன்னுடையது என அடையாளம் காட்டி கருப்புப் பிரதிகள் பதிப்பக நீலகண்டனும் சோபாவும் இணைந்து வெளியிட்ட இதழ் நிழற்படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதனை நானும் அடையாளம் காட்டியிருந்தேன். இவ்வாறு ஒரு கூட்டுச் செயற்பாட்டை தன் அடையாளமாக்கும் தற்குறிதான்  சோபாசக்தி.



ஆட்காட்டி என்ற ஒரு சிற்றிதழைத் தொடங்க வைத்து தனக்கான இலக்கியக் கூலிப்படைகளை எவ்வாறு அதில் தயாரித்தாரோ-

 எவ்வாறு தன்னுடைய செம்மறிகளாக அவர்களை வடிவமைத்தாரோ அதே போன்று தமிழ்நாட்டில் ஒரு பதிப்பகத்தினை தன் வசம் வைத்து அனைத்து அடையாளங்களையும் அழித்துவிடும் ஒரு அயோக்கியத் தனத்தைத் தொடர்ந்தும்  செய்து கொண்டிருக்கிறார் சோபாசக்தி.

மிக அண்மையில் இதே கருப்புப்பிரதிகளால் வெளியிடப்பட்ட தனுஜா என்ற புத்தகத்திற்கு நடந்த கதையை நீங்கள் அறியாதிருக்க மாட்டீர்கள். அதனை எழுதிய யேர்மனியில் வாழும்  திருநங்கை தனுஜா சிங்கம் அவர்கள் தன்னுடைய புத்தகம் குறித்துக் கேட்ட நியாயமான  கேள்விகளையெல்லாம்  அவர்கள் மலினமாக்கிக் கொண்டிருந்தார்கள். தன்னுடைய நூல் குறித்து அவர் கேட்ட கேள்விகளுக்கு அந்த அயோக்கியர்கள் அவரை தமது நட்புப் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு மவுனமானார்கள். இன்றுவரை அவர்களிடம் தனுஜா கேட்ட கேள்விக்கு எந்தப் பதிலும் பொதுவெளியில் முன்வைக்கிவ்லை. 


நான் கூட கருப்புப் பிரதிகளுக் கூடாக ரகுநாதம் என்ற என்கே. ரகுநாதன் அவர்களது புத்தகத்தை வெளியிட்டேன். அதனால் எனக்குகிடைத்த அனுபவம் மிகப் பெரிது. ஆரம்பம் முதல் அவர்களுடன் அதிகம் சண்டை செய்தேன். ஒரு இடத்தில் கருப்புப் பிரதிகளின் நிறுவனரான நீலகண்டன் என்ற அயோக்கியன் என்னை நட்பு நீக்கம் செய்து விட்டு ஓடிவிட்டான்.

தற்பொழுது அந்த ரகுநாதம் புத்தகத்தை எவரது அனுமதியுமற்று முதல் அச்சகத்தை விட்டு இன்னொரு அச்சகத்தில் இரகசியமாக இரண்டாவது பதிப்பினை பதிப்பித்திருக்கிறான் எனக் கேள்விப்பட்டேன்.  அவன் முதற்பதிப்பின் அனைத்துப் புத்தகத்தையும்  விற்றுவிட்டு தற்பொழுது இன்னொரு அச்சகத்தில் மேலும் ஒரு தடவை பிறிண்ட் செய்து விற்கத் தொடங்கியிருக்கிறான். இவனது பித்தலாட்டம் இவ்வாறுதான் தொடருகிறது. இந்த அயோக்கியன்தான் காலச்சுவட்டுக் கண்ணனைக் காசுக் கண்ணன் என்று அடைமொழி வைத்து அழைத்தவன். 

இப்பொழுது இவனை நாம் எப்படி அழைப்பது?


இவ்வாறான ஒரு அடிப்படை அயோக்கியனோடு கூட்டு வைத்து ஈழப் புகலிட இலக்கியங்களாக எவை அடையாளம் சொல்லப்பட வேண்டும் என்பதனைத் திட்டமிடும் பேர்வழிகளாக  சோபாசக்தியும் அவரது கூட்டாளிகளும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் முட்டாள்களின் விசில்களுக்கு எழுதும் தந்திரத்தை, அதற்காக மற்றவர்களது எழுத்தைத் தாரைவார்க்கும் பித்தலாட்டத்தை, பெண்களோடு படுக்கையைப் பகிரப் புகலிட இலக்கியத்தை விற்கும் களிசடைத் தனத்தை இனியாவது இந்த சோபாசக்தியிடம் கைவிடச் சொல்லுங்கள். கருப்புப் பிரதிகள் என்ற பதிப்பகம் புகலிடஇலக்கியத்தை காசாக்கும்  செயற்பாட்டைக் கைவிடச் சொல்லுங்கள்.

உங்களின் மூலமாக நான் இந்த விடயத்தை அவர்களுக்குச் சொல்வதற்காக எனக்குத் தந்த நேரத்திற்கு மிகவும் நன்றி.

இந்தப் புத்தகத்தையும்  மிகவும் சந்தேகக் கண் கொண்டு வாசியுங்கள்.

உண்மையில் பாதிக்கப்பட்டவர்களின் குரலாக அது இருக்கிறதா அல்லது சோபாசக்தியின் குரலாக அது இருக்கிறதா என்று வரிக்கு வரி வாசித்துப் புரிய முனையுங்கள்.


ஏனெனில் இன்று சோபாசக்தி செய்து கொண்டிருப்பது ஒவ்வொருவருடைய சுயத்தையும் அழித்துத் தன்னை முன்நிறுத்துவதேதான்.
















No comments:

Post a Comment

Editing & Ghostwriting சோபாசக்தியின் பித்தலாட்டம்- கற்சுறா

  அண்மைக் காலமாக, மிகக் கடுமையாக சோபாசக்தியின் இலக்கியச் செயற்பாட்டுமுறையை நான் ஏன் எதிர்த்து வருகிறேன்? கற்சுறா சோபாசகத்தியின் இலக்கியச் செ...