Sunday 13 November 2016

ஐரோப்பிய ஓவியங்களும் ஓவிய முறைமைகளும்


கற்சுறா

நிகழ்வு1






ஐரோப்பிய ஓவியங்களும் ஓவிய முறைமைகளும் என்ற ஒரு கருத்தாக்கத்தில் ஐரோப்பிய ஓவியங்கள் மற்றும் ஓவியர்கள் குறித்தான ஒரு கலந்துரையாடலை ஓவியர் கருணாவுடன் நண்பர்கள் சிலர் சேர்ந்து 10 நவம்பர் 2016இல் நடாத்தினோம்.
ஓவியம் குறித்தும் இலக்கியம் குறித்தும்  சினிமாகுறித்தும் கலந்துரையாடலையும் எதிர்க்கதையாடலையும் நிகழ்த்துவதற்கு நமக்கிடையில் அதிகமான விடையங்கள் இருக்கின்றன.
நமது தமிழச்சூழலில் இருக்கும் கலை வெளிப்பாடுகளின் மீதான உரையாடல்களில் ஓவியங்கள் குறித்த புரிதல் அல்லது கவனப்படுத்தல் அது சார்ந்த உரையாடல்கள் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதனை அனைவரும் உணர்ந்து கொள்ளமுடியும்.
ஈழத்தின் சிற்றிதழ் பரப்பில் மிக நீண்ட காலமாக நம் எல்லோராலும் அறியப்பட்டவர் ஓவியர் கருணா. ஓவியர் மாற்குவின் மாணவரான கருணாவுடன் ஓவியங்கள் குறித்து உரையாட, அறிந்து கொள்ள அதிகமான விடையங்கள் இருப்பதனை இலக்கிய நண்பர்கள் அறிவார்கள்.



Ontario art galleryஇல்  நடைபெறும் mystical landscape கண்காட்சியில் உலகின் மிக முக்கிய ஓவியங்கள் தற்போது வைக்கப்பட்டிருக்கின்ற இந்தக் காலத்தில் இப்படியொரு நிகழ்வை வைப்பதன் முலம் பலருக்கு அவற்றைப்பார்க்கின்ற ஒரு உத்வேகத்தினைக் கொடுக்க முடியும் என்ற விருப்பும் கருணாவுக்கு இருந்தபடியால்  நண்பர்கள் சிலர் சேர்ந்து இந்த நிகழ்வினை ஒழுங்கு செய்தோம்.அதனால் ஐரோப்பிய ஓவிய முறைமைகள் குறித்து முதலில் உரையாடவேண்டிய கவனம் முதன்மை பெற்றது.


நிகழ்வில் கருணா உரையாற்றத் தொடங்கியபோது இந்த உலகின் அறியப்பட்ட ஆகப் பழமையான ஓவியம் எதுவாக இருக்கும் எந்தக்காலப்பகுதியாக இருக்கும் என்ற கேள்விகளைக் கேட்டு ஆரம்பித்ததார். அது ஒரு நல்ல எதிர்பார்ப்பாகவும் சுவாரிசியமாகவும் இருந்தது.



17.000 வருடங்களுக்கு முந்தய ஓவியங்களையும் 35000 வருடங்களுக்கு முந்தய மனிதர்கள் வரைந்த குகை ஓவியங்களையும் காட்சிப்படுத்தினார். இவற்றைப் பிரான்சில் போய்ப்பார்த்த ஓவியர் பிக்காசோ  அவர்கள் கடந்த 12.000 வருடங்களில் நவீன ஓவியங்களில் நாம் ஒன்றையும் புதிதாகச் செய்து விடவில்லை. நாம் இப்போது செய்பவற்றை அவர்கள் ஏற்கனவே செய்துவிட்டார்கள் என்று எழுதியிருப்பதனைச் சுட்டிக்காட்டினார்.
 தொடர்ந்து மலர்ச்சி(1400களின் நடுப்பகுதி) காலத்து ஓவியர்களான
Leonardo da Vinci, Johannes Vermeer(holand), Michelangelo(Italy), Caravaggio(Italy), Albrecht durer( Germany) போன்ற பலரது ஓவியத் திறன்கள் கண்டடையும் வேறுபாடுகள் அதற்குள் குவியம் கொள்ளும் சிந்தனைகள் என்று மிக அவதானமாக ஒருவர் ஓவியத்தை உள்வாங்கிவிடக்கூடிய தகவல்களோடும் விளக்கப்படங்களோடும் உரையாற்றியது அனைவரை யும் ஈர்த்தவிடையம்.




இந்த நிகழ்வு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட நண்பர்களுக்கான அழைப்பாக மட்டும் விடுத்து நிகழ்த்தப்பட்டது. அடுத்த நிகழ்வுகளில் தாமும் பங்குபற்ற வேண்டும் என்ற விருப்பைப் பல நண்பர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அடுத்த நிகழ்வில் அவர்களுக்கான அழைப்பினை நிச்சயம் அனுப்பிவைப்போம்.

நிகழ்வின் புகைப்படங்கள்
நன்றி: துஷி துரைரட்ணம்