Friday 19 August 2016

ஓவியர் கருணாவுடனான தேனிலவு....



அது எக்ஸில் காலம்..
நான்: கலோ….
கருணா: கலோவ்வ்…..
முகம் தெரியாது. இந்தக் கலோவ்வ் என்ற இழுவைக் குரலில் மட்டும் அடையாளம் கண்டு பிடிக்கும் அளவில் தான் அந்தக் காலம் இருந்தது. அப்போது நான் பாரீசில் இருந்தேன். ஒரு ஓவியனாகவும் வடிவைமைப்பாளனாகவும் மட்டும் கருணாவை அறிந்திருந்த எனக்கு புகைப்படக்கலைஞனாக அறிந்திருக்க முடியவில்லை. கனடா வந்த பிற்பாடு கருணாவுடன் தான் மிக அதிகமான நாட்களைச் செலவழித்தேன். அப்போது அவரது பலவிதமான புகைப்படங்களைப் பார்க்கக் கிடைத்தது. கருணாவுக்கும் எனக்குமான உறவு எக்ஸில் இதழுக்கூடாகத்தான் ஆரம்பித்தது. எக்ஸில் இதழுக்கும் கருணாவுக்குமான உறவு மிகவும் இறுக்கமானது. ஒரு அதிசயமானது. இது எப்போதாவது தனித்து எழுதப்படவேண்டியது என்றே நினைக்கிறேன். இதழின் வடிவமைப்பில் தவித்திருந்த காலங்களை நிவர்த்தி செய்து நேர்த்தி செய்து விட்ட மனம் அது.

அண்மையில் அ.ராமசாமி அவர்கள் கருணாவைப் பற்றி எழுதியிருந்தார். அதனைப் பார்க்க கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது. 
நாம் எழுதியிருக்க வேண்டிய பதிவு அது. அத்துமீறி அவ்வப்போது வரும் கருணாவுடனான சண்டையும் சச்சரவுகளும் கடுங் கோபங்களும் மட்டுமே எனக்கு அது பற்றி நினைக்கவிடாமல் பண்ணியிருக்கிறது என்றே எண்ணுகிறேன். 


ஒரு நாள் நெருக்கத்தில் அ.ராமசாமி அவர்கள் கருணாவின் புகைப்படக் கலையைக் கண்டு வியந்து கொண்ட எழுத்து மிக மிக முக்கியமானது. அரகில் இருப்பவர்களுக்கு அருமை தெரிவதில்லை.


ஆனாலும் 2010ம் ஆண்டு எனக்கும் கருணாவுக்குமான ஒரு தேன்நிலவில் என்குடும்பத்தை  எடுத்த புகைப்படங்கள் தான் இதிலுள்ளவை... 


இன்றுவரை என்னையே பொறாமை கொள்ள வைக்கும் புகைப்படங்கள் இவை. 


எனது மற்றய நண்பர்களுக்கும் கருணாவுக்கும் இடையில் ஒரு தேனிலவு வந்து எப்படியும் ஒருமுறை வந்து விடவேண்டும்.

அண்மையில் ஓவியர் கிருஸ்ணராசா கனடாவந்திருந்த பொழுது பகிடியாக நடந்த உரையாடலில் தான் புதிதாக ஒரு கமாராவை வாங்க இருப்பதாகச் சொன்ன இடத்தில் இல்லைத்தலைவா இதுவும்  நல்ல கமாரதான் எனச் சொல்லி அவருடைய கமராவைக் கொண்டு எடுத்த புகைப்படம் தான் இது.

இது எடுத்தது 2016