Sunday 3 May 2015

உடல் வதையும் உள வதையும் -



கனடியத் தமிழ்ச் சூழலில் பெண்கள்.


பார்வதி கந்தசாமியுடன் உரையாடல் 
            கற்சுறா







பார்வதி கந்தசாமி ஒரு மொழியிலாளர்
இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார்
இலங்கைப் பல்கலைக் கழகங்களில் கல்வி பயிற்றி, அவுஸ்ரேலியப் பல்கலைக் கழகத்தில்முனைவர் பட்டம் பெற்றவர். பின்னர் கலிபோர்னியாவிலுள்ள ஸ்ரைன்போட் பல்கலைக்கழகத்தில் மூத்த புல்பிறைட் புலமைப் பரிசில் பெற்று, கற்பித்தும் ஆய்வுகள் செய்தும் வந்தார். கனடாவில் யோர்க் பல்கலைக் கழகத்திலும் அகதிகள் ஆய்வுத் துறையில் ஆய்வாளராக இருந்தவர். தற்பொழுது உளநோய் ஆலோசகராக கடமையாற்றுகிறார். சமூகத்தேடலுக்கான பல நூல்கள், பெண்கள், சிறுவர், முதியோர் தொடர்பான பல விழிப்புணர்வு நாடகங்களை மேடையேற்றியும், தொலைக்காட்சி நாடகங்களையும் ஆவணப்படத்தியுமுள்ளார். கனடாவில் முதுதமிழர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட வசந்தம் என்ற அமைப்பின் காரணகர்த்தா. பெண்ணியவாதியாக செயற்பட்டு வரும் இவர் 
கனடாவில் பெண்களின் பிரைச்சனைகளில் 
தனது கவனத்தை முழுமையாக ஈடுபடுத்துபவர்.




கனடியத் தமிழ் சூழலில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் எவை என்பதை உங்கள் அனுபவத்துக்கூடாக கூறமுடியுமா?

எனது அனுபவத்துக்கூடாக என்று சொன்னால் பெண்களின் உளவியல் பிரச்சனைதான் மிகப் பாரதூரமானதாக இருக்கிறது. அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளில் உளவியல் தாக்கம் இப்ப இப்ப கூடுதலாக வெளிப்படுகிறது. 90களின் ஆரம்ப காலங்களில் நான் அமெரிக்காவில் இருக்கும் போது ஷசிறகொடிந்த பறவைகள்ஷ என்றொரு நாட்டிய நாடகம் எழுதி ஷவாட்டலூஷ பல்கலைக்கழகப் பிள்ளைகளுக்கு அனுப்பினேன். 89ம் ஆண்டு நான் கலிபோர்ணியாவில் உள்ள ஸ்ரான்போட் பல்கலைக்கழகத்திற்குப் போனேன். இங்கு கனடாவுக்கு ஒவ்வொரு வருடமும் வந்து வந்து போயிருக்கிறன். இங்கு வந்து போகும் போது இங்குள்ள பெண்களிடம் கேட்டு அறிந்ததும், தெற்காசியப் பெண்கள் அழைத்த கருத்தரங்கில் விளங்கிக் கொண்டவற்றையும் கலிபோர்ணியாவில் ஜெயிலில் அடைபடடிருந்த தமிழ்ப் பெண்களிடம் கேட்டு அறிந்த தகவல்களையும் இணைத்து அந்த அநுபவங்களை நாடக வடிவில் காட்டச் சிறகொடிந்த பறவையை ஊடகமாக் கொண்டேன்எனது அநுபவத்துக்கு ஊடாகப் பார்க்கும்போது இங்குள்ள மேற்கத்தைய சூழலுக்குள் எங்கள் பெண்கள் நிறையவே பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள் என்ற உணர்வு ஆரம்பத்திலேயே தெரிந்தது. அவர்களில் பலர் ஏமாந்த பறவைகளாக ஒன்றும் தெரியாத சூழலுக்குள் இங்கு வானூர்திகளில் ஏற்றி அனுப்பப்படுகிறார்கள் என்றதைத் தெளிவாக உணர்ந்துதான் அந்த சிறகொடிந்த பறவைகள் என்ற நாட்டிய நாடகத்தை எழுதினேன். அதில் நான் அதிகம் கொண்டு வந்தது இந்திய இராணுவப் பிரச்சனைகள். உண்மையில் இந்திய இராணுவ ஆதிக்கக் காலங்களில் அதிகம் பாதிப்புக்குள்ளாகியது எங்கள் பெண்கள்- ஈழத்தின் யுத்தகாலத்தில் இலங்கை இராணுவம் பெண்களுக்குச் செய்த அட்டூழியங்களைவிட இந்திய இராணுவம் செய்த அட்டூழியங்கள் பாரதூரமானவை. பெண்கள் எதிர்நேர்க்கும் பிரச்சனைகள் என்று பார்த்தால் பெண்களை மூன்றுவகையினராக வகுக்கவேண்டும். 1. நடுத்தர வயதுப் பெண்களும் இளம் குடும்பப் பெண்களும் 2. இளம் பெண்கள்  3. வயோதிபப் பெண்கள். பெண் குழந்தைகள் என நான்காவது வகையினராகவும் வகுக்கலாம். இவர்களில் முதலாவது வகையினர் அதிக பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றனர்;. சீதனப் பிரச்சினை, பாலியல் தொடர்பான பன்முகப் பிரச்சினை, குடிவரவுப் பிரச்சினை, அதிகாரக்கட்டுப்பாட்டுக்குள் அடங்கி ஒடுங்கி நாலு சுவர்களுக்குள் அடங்கி இருக்கவேண்டியமை, குழந்தை, முதியோர் பராமரிப்பு, ஆங்கில வகுப்புகளுக்குச் சென்று கனடியச் சூழலை அறியும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளாமை, ஒன்றுக்கும் உதவியற்ற ஒரு சடமாக, மீண்டும் மீண்டும் காது அடைக்கக் கத்தப்படுவதாலும் காதைப் பொத்தி அறையப்படுவதாலும் ஒதுக்கப்படுவதாலும் ஏற்படும் உளவியற் பாதிப்பு, பாலிய வயதுப் பிள்ளைகளை வளர்ப்பதால் ஏற்படும் அழுத்தம், போதிய பணவசதியின்மை, குடுப்ப வன்முறைக்கு உள்ளாதல், சமூக- அரசியல் அதிகாரங்களுக்குக் கட்டுப்படல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர்.


அப்படி பாதிப்புக்குள்ளான பெண்கள் எத்தனை பேர் வரையில் இருக்கிறார்கள்?

இருக்கிறார்கள்நிறையப் பேர் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்தவர்கள் என்று நூற்றுக்கணக்கில்; இருக்கிறார்கள். இந்திய இராணுவ அட்டுழியங்களால் பாதிக்கப்பட்டோரில் அனேகமானவர்கள் வடபகுதிப் பெண்கள். இந்திய இராணுவத்தால் பாதிக்கப்பட்டு நாலாயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் குடாநாட்டில் விதவைகளாகியுள்ளனர். வன்னிப் பிரதேசப் பெண்களும் இருக்கிறார்கள். என்னுடைய சினேகிதரின் அக்கா ஒருவர் இந்திய இராணுவத்தால் பாதிக்கப்பட்டவர். அதன்பின் இச்சமூகத்தின் முன் முகம் கொடுக்க முடியாது என்ற குற்ற உணர்வில் அவ கிணற்றுக்குள் குதிச்சிட்டா  என்கிறார்கள். ஆனால் அவங்கள் தான் தூக்கிப்போட்டாங்களோ என்று யாருக்கும் தெரியாது. அதிகாரிகளிடம் கேட்க அவங்கள் சொன்னாங்கள் இது புலிகள் வந்து செய்திருக்கிறாங்கள் என்று. டொக்டர் சரவணபவானின் அறிக்கைப்படி அவ பாலியல் வதைக்கு உள்ளாகினவ. சாட்சியும் இருந்தது. அயலுக்குத் தெரியும் அமைதி குலைக்க வந்த இந்தியப்படைதான் செய்தது எண்டு. அதிகாரம் துப்பாக்கி முனையில் இருந்தது அவங்களிடம், அப்போது. யாரும் ஒன்றும் சொல்லமுடியாது.
அதைவிட இங்கு கலியாணம் பேசி வரும் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் அதிகமாகவேயுள்ளன. இலங்கையில் கலியாணம் செய்து குடும்பமாயிருக்கும் பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை விட இங்கு பாரதூரமாக இருக்கிறது. ஏனெனில் இங்கு குடும்பமாக இருக்கும் பெண்களுக்கு எவ்வித ஆதரவும் கிடையாது. அங்கு இருக்கும் சமூக பாதுகாப்பு இங்கு இருக்கின்ற பெண்களுக்கு இல்லை. ஆயல் இல்லை. பேச்சுக் கலியாணங்களால் பல பெண்கள் நிலை எவ்வளவு தூரம் பாதிப்புக்குள்ளாகிறது என்பது பலருக்குத் தெரியும். இலங்கை போல் குடும்ப உறவினர்களின் வட்டம் இங்கு நெருக்கமானதாக இல்லை. இங்கு நடக்கின்ற பேச்சுக் கலியாணத்தில் பேசப்பட்டு கனடா வரும் பெண், வந்த அன்றே தங்குவதற்கு வீடு இல்லை. வந்த அன்றே புருசனுடன்; போகின்றா. அந்நியமான ஒருவனுடன்- முன்பின் பார்த்திராத ஒருவனுடன் அவ போகிறா. இங்கு இரண்டு பேரும் ஆளுக்காள் அந்நியமானவர்களாகவே இருக்கிறார்கள். அனேகமான சூழலில்- ஊரில் பெண்ணின் பக்கத்து வீட்டுக்காரராகவும் அந்தப் பையன் இருந்திருக்கலாம். ஆனால் அங்கிருக்கும் போது அவனுக்கு வேறு ஒரு முகம் இருந்தது. ஆனால் இங்கு வந்து கனடியச் சூழலில் அவனுடைய முகம் வேற. இது தான் அதிகமான குடும்பங்களில் அடிப்படைப் பிரச்சனையாக இருக்கிறது. அதைவிட எங்கட குடும்பங்களில் மது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அதுக்காக மது அருந்தாத குடும்பங்களில் பிரச்சனை இல்லை என்பதல்ல. அங்கும் அனேகமான பிரச்சனைகள் இருக்கின்றன. மது அல்ல பிரச்சனை - மது அருந்தும் ஆள்தான் ஒரு பெரிய பிரச்சனை. இங்கு தமிழ்ப் பார்டிகளில் பார்த்தீர்கள் என்றால் தெரியும். ஆண்கள் ஒரு புறமாகவும் பெண்கள் ஒருபுறமாகவும் இருப்பார்கள். ஆண்களின் குடித்தல் நிகழ்வு ஆரம்பமாக பெண்கள் ரேஸ்ருக்கு தேவையான உணவுப் பொருட்கள் பரிமாறுவார்கள். அந்தச் சமயங்களில் நல்ல தண்ணியில் தளம்பும் அவரைப் புள்ளையளும் பாத்துக்கொண்டுதான் இருப்பார்கள் - ஆனால் அவர் இண்டைக்குத் தானே குடிக்கிறார். இங்கேதான் குடிக்கிறார் என்று தினமும் தண்ணியில் இருக்கும் புருசனைக் காப்பாற்றும் நிலை அவர்களுக்கு ஊட்டப்பட்டு இருக்கிறது. அவர்களை அறியாமலேயே அவர்கள் பாதிப்புக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பிரச்சனைப்படுத்தலுக்கு உட்படுகிறார்கள்.

பொதுவாகப் பெண்கள் (கனடாவில்) கலியாணத்திற்கு பின்பாக அதிக கொடுமைகளை அனுபவிக்கிறார்களா?

பலவகையாக இதைப் பார்க்க வேணும்.. கிழக்கு மாகாணம், மலையகத்திலிருந்து வந்கவர்களில் இப்படியான பிரச்சனை என்று வந்தவர்கள் மிக மிகக் குறைவுஅதற்கான சமூகவியற் காரணங்களைப் பார்க்கவேண்டும். எங்களுடைய கிராமங்களில் இருந்து வந்த பொம்புளயள்தான் இங்கு அதிகம் இருக்கிறார்கள். நகர்ப்புறம் சார்ந்து- நகர்ப்புறம் சார்ந்து என்றால் கொழும்பில்- யாழ்ப்பாணப் பட்டினத்தில் வசித்தவர்களைத்தான் சொல்லலாம் - வந்தவர்களது அநுபவங்கள் சற்று வித்தியாசமானவை. பெண்கள், கிராமப்புறங்களில்- யாழ்ப்பாண, மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களில் படித்த பெண்கள் கூடுதலாக வந்திருக்கினம்- அநேகமான பெண்கள் அங்கு படித்தவாகள்; அல்லது வேலை செய்தவர்கள். அவர்களுக்கு இங்கு வந்தபின் பெரிய ஏமாற்றம்- அவர்களில் பலர் இங்கு வந்தபின் குழந்தைகளைப் பெற்று;க் கணவன்மாரின் விருப்பில வீட்டுக்குள் அடங்கியிடுவினம்.. அதைவிட அவர்கள் எதிர்பார்த்து வந்தது போல வேலையை அவர்களது கணவன்மார் செய்யவில்லை. அனேகமான கணவன்மார் ரெஸ்ரோரன்ற்களில் கிளீனிங்- புயள ளுவயவழைn போன்ற வேலைகள்தான் செய்கிறார்கள். அது  அவர்களுக்கு பெரிய ஏமாற்றம்- ஒரு பொம்புளை இங்கு கலியாணம் பேசி வந்தவா. அங்கு பல்கலைக்கழகத்தில் லெக்சரா இருந்தவா. ;ங்கு கலியாணம் பேசி வந்த பின்தான் தெரியும் தன் மாப்பிள்ளை செக்கியூரிட்டி எண்டு- இதால செக்கியூரிட்டியாக இருப்பவர் கலியாணம் செய்யக்கூடாது என்று இல்லை. அது பிழையான வேலை எண்டும் இல்லை. பிரச்சனை அவ ஏமாற்றப்பட்டுப் போனா எண்டதுதான். அவவுடைய எதிர்பார்ப்புக்கு ஒரு இடி விழுந்த மாதிரி. அவர் செக்கியூரிட்டிதான் என்று தெரிந்து வந்திருந்தால் விசயம் வேறு. ஆனால் எங்ட நாட்டிலை மத்தியதர வர்க்கத்தின்ரை எதிர்பார்ப்பைச் சுமந்து வந்த அந்தப் பெண்ணுக்கு தன்ரை மாப்பிளை  எஞ்ஞினியர் அல்ல என்றதும் தான் ஏமாற்றப்பட்டுவிட்டேன் என்றதும் பாரிய மனத்தாக்கத்;தைக் கொண்டுவரும்தானே! அதைத்தாங்கி வாழும் சூழலில் அவ இருக்கமாட்டா- கனடாவைப் பொறுத்தளவில் அகதிகளாக வந்த பெண்கள் குறைவு. ஆண்கள்தான் அகதிகளாக வந்தவர்கள். அவர்களை நோக்கி வந்த பெண்கள்தான் கூடுதலாக இருக்கிறார்கள். மாப்பிள்ளைமாரைத் தேடிவந்தவர்கள், அதைவிட கணவன்மார்களிடம் ஸ்பொன்சர் மூலம் வந்தடைந்த பெண்கள்- ஆகிய இருவகையினரின் எண்ணிக்கையும்தான்; இங்கு அதிகம்.. இவர்களிடம் - அதாவது கலியாணம் செய்ய என்று அங்கிருந்து வந்த குடும்பங்களில் தோன்றும் பிரச்சனைகள் மிகவும் பாரதூரமானவையாக இருக்கும்..
இன்றைக்கு நீங்கள் கனடாவை எடுத்துப் பார்த்தீங்கள் என்றால் இப்படி வந்த பெண்களை நாங்கள் ஒரு வகையினராகப் பிரிக்க வேண்டியிருக்கிறது. இங்கு வளர்ந்து கொண்டுவாற பிள்ளைகளை வேறு ஒரு வகையாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. அதைவிட அங்கிருந்து இளம் பெண்களாக இங்கு வந்தவர்களை வேறு வகையாகப் பார்க்க வேண்டும். ஏனெனில் இவர்கள் எல்லோருக்குமான பிரச்சனைகள் வௌ;வேறு காலகட்டம்- சூழல் போன்றவற்றால் தாக்கப்பட்டு பாதிப்புக்குள்ளானவர்களாக இருக்கினம். அதாவது என்னுடைய மகன் படிச்ச காலத்தில்- அதாவது ஒரு 5 வருசத்துக்கு முந்தி. அவற்றை படிப்பு வட்டத்தில் உள்ள சில பொம்பிளைப் பிள்ளைகளுக்கு போன் எடுக்கேலாது. பெற்றோர் தமது பிள்ளையள் ஆம்பிளைப் பிள்ளைக்கு போன் எடுத்தால் தடுக்கினம். ஆனா இண்டைக்கு கொஞ்சம் கொஞ்சம் மாறிவிட்டதுஇங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகளுக்கு கூட கலியாணத்தடை விதிக்கப்பட்டு அவர்களின் காதலுக்கு தடை விதிக்கப்பட்டு- காதல் பிரிக்கப்பட்டு பெற்றோர்களின் வற்புறுத்தலுக்குள்ளால அவர்கள் வேறு ஒரு சூழலுக்குள் போகினம்.. சில பிள்ளைகள் அதனை நமது வழமை- மரபு என்று ஏற்று பழையபடி தாய் தகப்பனைப்போல் மாறுகினம்.. தமிழ் சினிமாவின் பாதிப்பு நமது பிள்ளைகள் கனபேரிடத்தில் இருக்கிறது தானே.


புலம் பெயர்ந்த சூழலை கவனத்திற்கெடுத்தால் மிக அதிகமான பெண்கள் தற்கொலைக்கு உள்ளானது கனடாதான்- எப்படி அதன் உக்கிரம் இங்கு இருக்கிறது- எத்தனைபேர் தற்கொலை செய்திருப்பார்கள்?
               
நாங்கள் இங்கு தற்கொலை நிறையவே இடம்பெறுகிறது என்று யோசித்து 95ம் ஆண்டு ஒரு வீடியோ ஒன்று எடுத்தோம். அதற்குப் பெயர் மன உளைச்சல். அரை மணிநேர வீடியோ- அதில் ஒரு பெண் எப்படி- என்ன விதமான மன உளைச்சலுக்கு உள்ளாகிறாள்- அந்த மன உளைச்சலை எந்தெந்தக் காரணிகள் தீர்மானிக்கின்றன- அவைகள்தான் அவளை தற்கொலைக்கு தள்ளிவிடுகின்றன என்பதைப் பார்த்தோம்- தற்கொலைக்கு தள்ளிவிடும் சூழலுக்கு ஒரு பெண் வரும்போது நாங்கள் அப்படி ஒரு பெண்ணைச் சந்திச்சோமெண்டால் எவ்வாறு உதவி செய்யலாம் என்பதுதான் அந்த வீடியோ- அது ஒரு நல்ல வெற்றி; அதற்குப்பிறகு பெண்கள் நீண்டகாலமாகத் தற்கொலை செய்யவில்லை. பின்னர்  ஒரு பெண் மட்டும் அதுவும் கொலையா- தற்கொலையா என்பது கேள்விக்குறியாக இருந்து பிறகு அது கொலையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பெண்ணினுடைய கணவன் இன்னும் ஜெயிலில் தான் இருக்கிறார். நீண்டகாலமாக பெண்களுடைய தற்கொலைகள் நடக்காமல் இருந்தது.பிறகு திகிலூட்டும் கொலைகள் நடந்தன. அண்மையில் ஒருசில தற்கொலைகள்! ஆனால் ஒரு காலத்தில் நடந்து வந்த தற்கொலைகள் திடீரென்று ஒரு நிறுத்தம் வந்தது இந்தக் கல்விய+ட்டலினால். ஒரு அரை மணி நேர வீடியோதான். ஆனால் கலாபம் நிறுவனத்தினூடாக பல தடவைகள் இங்கே போட்டோம்.. அது நமது பெண்களிடத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்குள்ள சூழல் எப்படி, என்னென்ன பிரச்சனைகள் பெண்களைத் தற்கொலைக்குத் தூண்டுகின்றன என்று நினைக்கிறீர்கள்?

தங்களைப்பற்றிய நல்ல அபிப்பிராயமோ தங்களால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையோ இந்தப் பெண்களிடம் இல்லை. அது ஏற்படுத்தப்படவில்லை. தன்னம்பிக்கை ஊட்டப்படாததால் அவர்கள் தங்களால் ஒன்றும் இயலாது. தாங்கள் ஒன்றுக்கும் உதவாத ஆட்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தற்கொலை செய்த பெண்களின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், அதில் ஒரு பெண் தான் விரும்பியவரை விட்டு வேறு ஒருவரைப்; பெற்றோரும் சகோதரர்களும் கலியாணம் செய்யும்படி தூண்டியதால் தற்கொலை செய்து கொண்டவர்;;. அவர் வேறுயாரிடமும் அதுபற்றிச் சொல்லவில்லை. ஆனால் டுஐN வகுப்பில் அது பற்றிக் கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறா. அவ சும்மா எழுதின கட்டுரை அவவின் வரலாறாக இருந்திருக்கிறது. அது பற்றி ஆசிரியர்கள் கவனப்படவில்லை- அவர்கள் கவுன்சிலர்கள் இல்லை என- அவ இறந்த பின்தான் எல்லோரும் யோசித்தார்கள். ஐயோ பிள்ளை இப்படி எழுதினதே கட்டுரை என. இப்படி இந்தப் பெண்களுக்கு எங்கே உதவிக்குப் போறது என்ன செய்யுறது என்று தெரிவதில்லை
இன்னொன்று 20வயதுக்கு மேல் உள்ள பிள்ளை கலியாணம் செய்ய என வந்தவர் அவவைப் பாவிச்சு அகதி அந்தஸ்த்து இழந்த தன் காதலியைக் கைப்பிடிக்கப் பயன்படுத்தப் பட்டதாலும் தனது வருங்காலக்கணவர் என மனதால் அவரைக் காதலித்ததால் மனமுடைந்து மாடியால் பாய்ந்தவ ஒருவர் எனக் கூறப்பட்டது. இப்ப பிரச்சனைக்கு உள்ளான பெண்களைக் கவனித்தால் பலரும் இவரை வேண்டாம்- இந்தக் கலியாணம் வேண்டாம் என்று சொன்னோம் என்பவர்கள் தான் கூடுதலாக இருக்கினம்- இதைவிட சமூக நிர்ப்பந்தமும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது, அதாவது காதலித்தவர்கள்- கண்டு இரண்டு நாள் கதைச்சால் போதும் கதைத்தவர்களைத்தான் கலியாணம் செய்ய வேண்டும்- என்ற நிர்ப்பந்தம்- அவர்கள் எங்கும் எதிலும் சேர்ந்து போகாதவர்களாக இருந்தாலும் அவர்களைச் சேர்த்து வைக்கிறது சமூகம்.. காதல் என்பதற்குப் புது வரைவிலக்கணம் எஙகடை சமூகத்திலை. கண்டதும் காதல். கண்டறியாததும் காதல்.

கனடாவில் தற்கொலை செய்த பெண்களைப்பற்றிச் சொன்னீர்கள். அடிப்படையில் குறிப்பிடும்படி என்ன சிக்கல்கள் இருக்கின்றன?
                
புருசன்மாரின் வன்கொடுமை நிறையவே இவர்களுக்கு இருக்கிறது. அது தாண்டி மனோவியல் ரீதியில் பாதிக்கப்பட்ட பெண்களும் இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் பார்த்தீங்கள் என்றால் புருசன்காரன் சொல்கிறான்-ஒருநாளும் தான் பெண்சாதிக்கு அடித்ததில்லை என்று- அங்கு பிரச்சனை என்னவென்றால் உளவியல் ரீதியில் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர்  புரிந்துகொள்ளவில்லை. இருவரையும் வற்புறுத்திக் கட்டி வைத்திருக்கிறார்கள். விரும்பிச் செய்த கலியாணம் இல்லை. ஒரு பிள்ளை எல்லாம் சுதந்திரப்பறவையில் இருந்த பிள்ளை. அது கொஞ்சக் காலம் என்றாலும் சுதந்திரமாக தான் விரும்பியதையும் செய்து திரிந்த பிள்ளை- அப்படியான ஒரு சின்னப் பிள்ளையை திடீரென கொண்டுவந்து கலியாணம் செய்து வைத்தால் அதுக்கும் பிள்ளைகள் பிறந்தவுடன் பிள்ளை பெறும் இயந்திரம் மாதிரி வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்து பிள்ளைகளைப் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம்  வெளியில் வேலைக்குப் போய் சுத்தித்திரிந்த பிள்ளைக்கு வீட்டில் அடைச்சு வைத்தது இன்னொரு பாரிய கொடுமை. அதால அந்தப் பிள்ளை தற்கொலை செய்திருக்கு- அந்தப் பிள்ளை தற்கொலை செய்ததும் எல்லோருடைய கேள்வியும்- அவளுக்கு என்ன குறை? ஏன் தற்கொலை செய்ய வேண்டும்? என்பது எல்லோருடைய குறையும்- ஆனா அவவுக்கு தான் வேலை செய்ய வேண்டும் என்று ஆர்வமாக இருந்திருக்கிறது. அவவுக்கு வேலை செய்ய முடியவில்லை. பிள்ளைகள் அவவுக்கு பெரிய ஒரு சுமை- அவவுக்கு வயது குறைவு- பிள்ளை ஒன்றும் வருத்தக்காரப் பிள்ளையாய்ப் போச்சுது. அவரின் ஆறுதல் தனது அம்மா வரும் வரைக்கும் பொறு,பொறு என்பதுதான்- ஆனால் அவவுக்கு கலியாணம் கட்டின நாள் முதல் மன உளைச்சல் இருந்திருக்கவேணும்- யாரிடமும் வெளியில் சொல்ல முடிவதில்லை. தனது நிலை பற்றி அறிய முடிவதில்லை. அவர்களுக்கு வெளியில் போய் யாரிடமாவது கதைக்கும் சூழல் இருந்திருந்தால் இப்படியான முடிவுகள் பெரும்பாலும் எடுக்கமாட்டுதுகள்- கனடாவிலை மொழியும் ஒரு தடைதான். நமது குடும்பச் சூழல்தான் மிகவும் மோசமான தாக்கத்தை கொண்டு வருகிறது. புருசன் என்பவன் ஏதோ தெய்வம் என்றும் அந்தப் புருசனைச் சார்ந்து வாழ வேண்டியது நமது கடமை என்றும் கட்டப்பட்ட இறுக்கமான கலாச்சார சூழலில் இந்தப் பெண்களுக்கு தம்மை எப்படி விடுவிக்க வேண்டும் என்று தெரிவதில்லை. அதற்கான அரச உதவி நிறுவனங்களது உதவி இவர்களைப் போயடைவதைப் பற்றி அக்கறை எடுப்பதில்லை. தட்டுங்கள் திறக்கப்கடும் கேளுங்கள் தரப்படும்தான். மனப்பாதிப்பைப் பற்றிய விளக்கம் தந்த சுசான் என்ற மனவைத்தியர் பாயும் புகையிரதத்தில் குழந்தையுடன் பாய்ந்து மாய்ந்தும் கூட மேல் நாட்டுச் சமூகம் கூட அக்கறை எடுப்பதாய் இல்லை. வேரோடு புடுங்கி எடுக்கப்பட்டுப் புதிய சூழலில் வேர்கள் இல்லாமல் பனிச்சூழலில் கட்டிடக் காட்டுக்குள்ளே நாலு சுவர்களுக்குள்ளேயும் நச்சுக் காற்று நிறைந்க பாதாள அறைகளிலும் தனித்து விடப்படும்போது நமது பெண்களது மனம் விரக்தியடையாமல் என்ன செய்யும்?

தமது பிள்ளைகள் அவர்களின் புருசன்மாரினால் எவ்வளவு கொடுமைக்கு உட்படுத்தப்பட்டாலும் பெற்றோர், உடன்பிறப்புக்கள். சமூகம் சேர்ந்து வாழும்படியே வற்புறுத்திக் கொண்டிருக்கினம். வா- அல்லது பிரிந்து போ- கொஞ்சக் காலத்திற்காவது பிரிந்திரு என்று சொல்கிற பெற்றோர் மிக மிகக் குறைவு. இப்படியான சூழலில் குடும்பத்தாலும், சமூகத்தாலும், அரசாலும்; கைவிடப்படும் பெண் பிள்ளைகள் - ஆதரவற்ற பெண்கள் உளப்பாதிப்புக் கூடி தற்கொலையை நாடுகின்றனர். அவர்களுக்கு தம்மை அழித்து விடுவதே ஆதரவற்ற நிலையின் விடுதலை என்று நினைக்கின்றனர். இப்ப அண்மையில் றெயினுக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பெண்கூட, அவவுக்கு அவவின் குடும்பத்தால பாதிப்பு ஏற்பட்டதாக இல்லை. ஆனால் அவா, தனது புருசனை இழந்துவிட்டதும் தான் எல்லாவற்றையும் இழந்து விட்டதாக நினைத்து விட்டா. அந்தப் பெண் தன்னுடைய பிள்ளைகளை கார் டிக்கிக்குள்ள போட்டுட்டு தானும் படுத்துக் கொண்டு தன்னுடைய உயிரையும் எடுக்க முனைந்தா முதல். அவவுக்கு அப்போதே மனச்சோர்வு இருக்குது. அழுது கொண்டே இருக்கிறா. ஒரே வீட்டுக்குள்ளேயே இருக்கிறா. தன்ர புருசன்ர 50 படங்களை வீட்டின் கோல் முழுக்கவும் போட்டிருக்கிறா. இது அதாவது அவவின் மனச்சோர்விலதான் அவ அப்படிச் செய்கிறா என்று உணர்ந்த கொள்ளும் ஆற்றல் அவவின் உறவினர்களுக்கு இருக்கவில்லை. அதை உணர்ந்து கொள்ளக் கூடிய ஆற்றலை உண்மையில் நாங்கள் வளர்க்க வேண்டும்.

.பல குடும்பங்களுக்குப் பெண்களைப் புரிந்து கொள்ளுதலில் மிகப் பெரிய சிக்கல் என்னவென்றால், அநேகமானவர்கள் பெண்களிலேயே அனைத்துப் பிழைகளையும் போடுகிறார்கள். என்ன பிரச்சனைக்கும் பெண்தான். பிள்ளை பிழை விட்டாலும் பொம்புளைதான். புருசன் பிழை விட்டாலும் பொம்புளைதான். புருசன் கசினோக்குப் போனாலும் பொம்புளைதான் பிரச்சனை. புருசன் குடிச்சாலும் பொம்புளைதான் பிரச்சனை. இந்த மனோநிலைதான் பெரிய பிரச்சனை. அப்ப, நீ சரியா இருந்தா அவன் ஏன் குடிக்கிறான். நீ சரியா இருந்தா திருத்தலாம். இப்படித் திருப்பித் திருப்பி திருப்பி வந்து அந்தப் பொம்புளைதான் பிரச்சனை. எண்டு பழி பிரச்சனை எங்கேயோ இருக்க பிரச்சனையால் பாதிக்கப்பட்டவவைத் தாக்கிறது சமூகம். இண்டைக்கு கனடாவில வந்து என்ன கதைக்கினம் எண்டா பெண்ணாதிக்கம் கூடிவிட்டது. கனடாவில ஆம்புளையளுக்கு பொம்புளையள் ஞாயம் கதைக்கினம். டிவேர்ஸ் எடுக்கினம். என்ற போக்கு பொதுப் புத்தி மட்டத்தில இருக்குது. அதைவிட பெண்களைப் பற்றி மோசமான கதைகளை உருவாக்குவது பெண்களாகத்தான் இருக்கினம்.. அவர்கள் தாங்கள் சுமந்துவந்த சமுதாயப் படிமானத்தை, அதாவது ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற படிவத்தை மனதில நல்ல வடிவாகத் திடமாக திட்டமாகப் பதித்து வைத்திருக்கிறார்கள். அப்ப அந்தப் படிவத்தில இருந்து விலகினா அது பிழை. நான் ஒரு ஆம்பிளையோட காரில் போனா அவனோட நான் தொடர்பு. பாலியல் தொடர்பு என்றது மாதிரியான பேச்சுக்களை முன்வைக்கத் தயங்காதவர்கள். இளம் பெண்கள், புருசனை விட்டுட்டு இருப்பவர்கள், புருசன் இல்லாது இருப்பவர்கள, புருசனை இழந்தவர்களதான் இப்படியான துன்புறுத்தலுக்கு உள்ளாபவர்கள். இது ஒரு மிகப் பெரிய கொடுமை..

இப்போது இங்கு பிரிந்திருக்கும் பெண்கள் எவ்வகையில் மீளவும் புருசன்மாரினாலோ குடும்ப உறவினர்களாலோ பிரச்சனைக்கு உள்ளாகினம். அவைக்கு எப்படி கனடிய அரசு உதவி வழங்குகின்றது?
                
எவ்வளவு பிரிஞ்சு இருந்தாலும் பல பெண்கள் மீளவும் கணவர்மாருடன் திரும்பிப் போறவர்களாகத்தான் இருக்கிறார்கள். திரும்பிப்போய் மீள கூடுதலான வன்முறைச் சூழலிற்குள் உள்ளானவர்கள் அதிகம்- எங்கள் பெண்கள் மட்டுமல்ல கனடியச் சமூகத்திற்குள் இருக்கும் பெண்களே அப்படித்தான்- உண்மையாக கொடுமையான வன்முறை ஏற்படுவது நமது பெண்களைவிட மேற்கு நாடுகளில் வாழுகின்ற பெண்களுக்கு கூட- அதை எங்கட ஆட்கள் உணர்ந்து கொள்வதில்லை. அவர்கள் உடுப்பை வித்தியாசமாகப் போட்டு வெளியில திரிஞ்ச உடன அவர்கள் சுதந்திரமானவர்கள் என்ற எண்ணம் நம்மவர்களிடம் உள்ளது. ஏனெண்டா றோட்டில தெருவில கொஞ்சுகினம்- என்றவுடனே அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது என்று நினைக்கினம்- இங்கு வன்முறைக்கு உட்பட்ட பெண்களுக்கு- ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு என்று இருக்கும்செல்ற்றர்வழிய போய்ப் பார்த்தீர்கள் என்றால் ஏராளமான வெள்ளைப் கறுப்புப் பெண்கள் இருப்பதைப் பார்ப்பீர்கள்- அதுக்குள்ள வந்து இப்போது அநேகமாகப் புது வரவாளர்களின் தொகை கூடிக் கொண்டு வருகிறது. இங்கே வைத்தியசாலைகளில் உளவியல் பிரிவுகளில் இருக்கும் தமிழ் பெண்களை விட செல்ற்றரில் இருக்கும் தமிழ்ப் பெண்கள் குறைவு- ஆனால் செல்ற்றரில் இருக்கும் மற்ற இனப் பெண்களில் புதுக்குடிவரவாளர் அதிகம்செலற்;றரில் இருப்பவர்கள் உளவியல் தாக்கத்துக்கு உட்படாதவர்கள் என்று இல்லை- எங்கள் பெண்களை அதிகம் உளவியல் நிறுவனங்களில்தான் காணக்கூடியதாக இருக்கிறது என்றால் இது எதைக் காட்டுகிறது? நாங்கள் அடிவாங்கி வாங்கி வாங்கி மனமே மரத்துப் போகிறது- வதைப்படுத்தும் வார்த்கைப் பரயோகங்களால மனம் பேதலிச்சுப் போகிறம்- அதுக்குள்ள நீங்கள் பார்த்தீர்கள் என்றால் ஒரு பெண்ணுக்கு பாரதூரமான உளவியல் பிரச்சனை வந்தால் அந்தப் பெண்ணைக் கைவிட்டு ஆண் வெளியேறுவது எமது சமூகத்தில் அதிகமாக இருக்கிறது. ஆனால் ஆணுக்கு அப்படி நடந்தால் கூடுதலான பெண்கள் கடைசி வரையும் வைத்துப் பார்க்கினம். நான் வேலை செய்யிற தமிழ் பெண்களிடையே தமிழ் குடும்பங்களில ஒரே ஒரு ஆண்தான் சுகவீனமாக ஆனால் குடும்பத்தோடு இருக்கிறார்- மற்றவர்கள் எல்லோரும் பெண்கள். பெண்களுக்கு உளவியல் பிரச்சனைகள் வந்தவுடன் விலகியவர்கள்தான பலர்;- தனித்து பெண்ணை விட்டுவிடுவது. ஏனென்றால் பாரிய உளவியல் பிரச்சனைகள் உள்ள பெண்களிடம் பாலியல் உணர்வுகள் இல்லை என அவர்கள் கூறுகின்றனர். இப்படியான பெண்கள் ஆண்களால் கைவிடப்படுகிறார்கள்அந்த நிலையில் ஆண்கள் இருக்கின்றனர். ஆனால் அவளிடம் கல்லானாலும் புரு~ன் என்பது மீண்டும் மீண்டும் பல சமூகப் பெறுமானங்களுடாக பல்வேறு மட்டங்களில் வற்புறுகத்தப்படுகின்றது. அதனால் அவள் கைவிடமுடியாதவள ஆகின்றாள.;. கணவனுடன் பேசாமல் இருக்கும் பெண்களும் தாலியைக் கைவிடமாட்டார்கள். கணவன் இரண்டாம் மனைவியோடை வாழந்;தாலும் தாலி முதல் மலைவியின் கழுத்திலையிருந்து இறங்கமாட்டாது. இது எதைக்காட்டுகிறது என்றால் சமூகம் பெண்மீது கணவன் என்ற அதிகார ஏணியால் அவளைத் தானே தன்னை இனங்காண முடியாதவாறு ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதைத்தான். அவள் அத்தகைய நிலையில் தான் இருந்துகொண்டே தன்னை இழந்த நிலையில் தாலியுடன் வாழுவதே பாதிக்கப்பட்ட மனநிலைக்கு உதாரணமல்;லவா? தாலி அவளது சமூகப் பாதுகாப்புக்கருவி. சமூக அடையாளத்தை காக்கும் ஒன்றாக அவளுக்கு உள்ளது.

செல்ற்றரில் இருந்து எத்தனை பெண்கள் தற்கொலை செய்திருப்பார்கள்?
                
செல்ற்றரில்- அதாவது காப்பகங்களில் இருந்து யாரும் தற்கொலை செய்யவில்லை. செல்ற்றருக்குப் போன தமிழ்ப்பெண்கள் யாரும் தற்கொலை செய்யவில்லை. ஆனால் போன எல்லாரும் பின்னர் தனிய வாழ்கை நடத்துகிறார்கள் என்றும் இல்லை. அதுக்குள்ள ஆதரவுகள் நிறைய இருக்குது. அதுக்குள்ள போகும்போது முதலில் நிறையப் பெண்களுக்கு சரியான கஸ்டமாக இருக்கும்- செல்ட்டர்களுக்கு நான் போறனான். செல்ட்டர்கள்தான் என்னுடைய இப்பத்தைய வேலைகளின் ஆதாரம்.. அதில இருக்கிற பிள்ளைகள் ஆரம்பத்தில சரியான மன உளைச்சல்களுக்கு உள்ளாகி தங்களைப் போட்டு சித்திரவதைப்படுத்துவினம். அவர்களுக்கு தாங்கள் கொலை செய்யப்படுவினம் என்ற பயம் கூட எப்பவும் இருந்துகொண்டிருக்கிறது. ஏனென்றால் வெளியில இருந்து வாற பிரச்சனைகள் பெரிய பயங்கரமான பிரச்சனைகள்- அது மடடுமல்ல ஒரு செல்ட்டரில் இருந்து ஒரு பிள்ளை வெளியில் போக அண்ணன்காரன் கையில எட்டிப் பிடிச்சிட்டான் தேடித் தேடி செல்ட்டரைக் கண்டுபிடிச்சு வந்து அவவை எட்டிப் பிடிச்சுக்கொண்டு, எங்களை அவமானப்படுத்துகிறாய்- எங்கட குடும்ப மானம் போகுது- நீ உன்ர புருசனோட போகோணும் என்று சொல்லி வற்புறுத்துவினம். இந்தப் பிள்ளைகளை குடும்பம்- பாதுகாக்கேல்ல- ஆதரவு தரேல்லை- அந்தப் பிள்ளைக்கு எல்லாம் அவவின் குடும்பத்தின் ஆதரவு துப்பரவாக இல்லை. எல்லோரும் கைவிட்டிட்டினம். ஏனென்றால் நீ புருசனை விட்டிட்டுப் போட்டாய்- அவவுக்கு புருசனோட வாழப் பிடிக்கவில்லைஆனா குடும்பம் புருசனோட போ எண்டு வற்புறுத்துகிறது- அப்ப இந்த குடும்ப உறவு- இரத்த உறவு என்று சொல்வதெல்லாம் என்னவாகின்றது இப்போது? எப்படியாவது பிள்ளையைத் தேடி அலைந்து கண்டுபிடித்து புருசனோட சேர்த்துவிடத்தான் இந்தக் குடும்பம் முன்னிற்கிறது. புருசனின் கொடுமை பற்றியோ உளவியல் ரீதியில் அது ஏற்படுத்தும் தாக்கம் பற்றியோ ஒரு அக்கறையும் படுவதில்லை இது. கட்டிய புரு~னிடமே பாலியல் கொடுமைகளைச் சகிக்க முடியாத சில பெண்கள் உள்ளனர். இதை எங்கட சமூகம் நம்புமா? மேலை நாட்டு வீடியோக்களுக்கான பாலியல் ஈடுபாடுகள் நிஜவாழ்க்கை நிகழ்வுகளாகக் கருதித் தங்கள் மனைவியரை வற்புறுத்தும்போது அதுவும் பாதிப்பைப் பெண்களிடம் ஏற்படுத்துகின்றது.


சில பெண்கள் பிள்ளைகளுடன் செல்ட்டரில் வாழ்கிறார்கள்தானே. அவர்களுக்கான உதவி பராமரிப்பு செல்ட்டரில் எப்படி இருக்கிறது?
               
  செல்ரர் என்பது ஒரு னிரந்கர வதிவிடம் அல்ல. தற்காலிக வதிவிடம்தான். கூடுதலான பெண்கள் பிள்ளைகளுடன்தான் இருக்கிறார்கள். செல்ட்டரில் வாழ்கை கஸ்டமானது. குறிப்பாக எங்களது குடும்பங்களுக்கு இது மிகவும் கஸ்டம்வாழ்iகைமுறை, மொழி, உணவு, இடவசதி, பாடசாலை வசதி, பணவசதி கஸ்டம்தான். ஆனால் செல்ட்டர் தற்காலிகமானதுதான்- ஆனாலும் நாய் வாயிலிருந்தும், புலிவாயிலிருந்தும், நரிகள், ஓநாய்கள், வல்லூறுகளிலிருந்தும் பாம்புகளின் நஞசிலிருந்தும் வெளியேறியதாகப் பலவேறு மிருகங்களாகத் தங்கள் கணவர்மாரின் கொடுமைகளை வர்ணிக்கும் பெண்கள் செல்ரரில் கஸ்டங்கள் இருந்தாலும் தாங்கள் பட்ட மனச்சித்திரவதையை விட அது பரவாயில்லை என்கிறார்கள். என்ன பிரச்சனைகள் என்றால் எல்லா செல்ட்டர்களும் வசதியானது என்று இல்லை. அரசாங்கத்தின் நேரடிப் பணம் போகும் செல்ட்டர் என்று இருக்கிறது- கொஞ்சம் கூடுதலாகப் பணம் கொடுபடும். அவர்களுக்கு. அவர்கள் கொஞ்சம் வசதியான அறைகள் வைச்சிருக்கினம்- ஆனா வேற செல்ட்டர்கள் இருக்குது. சரியான நெருக்கம். ஒரு அறைக்குள்ளேயே தாய் பிள்ளைகள் எல்லாம் படுக்கோணும். மேலேயும் கீழேயும் படுக்கிற கட்டில் இருக்கும். சில இயங்களில அதுக்குள்ள குசினி எல்லாம் பொதுவாக இருக்கும்.. தாங்களே சமைக்கலாம். சில இடங்களிலை ஒரு அறையிலையே இரண்டு முடும்பங்களும் இருக்கும். சல இடங்களிலை சாப்பாடு எவ்வாம் வழங்கப்படும். முஸ்லீம் பெண்களுக்குலால் முறைப்படியான உணவுப் பிரச்சனைகள்- மாமிசச் சாப்பாடு, மரக்கறிச் சாப்பாட்டுப் பிரச்சனைகள் எல்லாம் இருக்கு. இப்போ கொஞ்சம் கொஞ்சம் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. எமது நாடு மாதிரி இங்கு எல்லாம் அரசாங்கத்தின் நேரடிக் கண்காணிப்பு இல்லை. ஒவ்வொன்றும் தமது சபைக்குள்ளால் இயங்கும். அரசாங்க கண்காணிப்பில் இருக்கும் செல்ட்டரில் வேலையாட்கள் கூடவாக இருக்கும். இப்படி செல்ட்டர் சிக்கல்கள் இருக்க செல்ட்டர் வேலையாட்களால் பாதிக்கப்பட்ட பாரபட்சம் காட்டப்பட்ட பெண்களகூட இருக்கிறர்கள். நான் போற ஒரு செல்ட்டர் திறமான செல்ட்டர்- ஏனென்றால் அதன் தலைவர் வந்து ஒரு கறுப்பினத்தவர். அங்கு பணிகள் நடக்கும் விதம் வித்தியாசம். வேறு ஒரு செல்டர் இருக்கிறது. அங்கே நானும் வேலை செய்தனான். ஒன்றரை மாதம் வேலை செய்தனான். என்னையே கலைச்சாச்சு. நான் பெண்களுக்கு கூட ஆதரவு செய்யுறன். தங்களுக்கு எதிராக நடக்கிறன் என்று. பொதுவாக செல்டரில் துவேசம் இருக்கிறது. அதைவிடப் பிரச்சனை பிள்ளைகள்தான். நிறையப் பிள்ளைகள் சிறிய இடத்தில் இருக்கும் போது பாரிய சிக்கல்கள் வரும். குடும்பத்தின் வன்முறைச் சூழலுக்குள் ஆட்பட்டு பாதிக்கப்பட்ட பிள்ளைகள் அங்கு வருவார்கள். அவர்களுடன் வேறு பிள்ளைகள் கலக்கும் போது. பெருத்த சிக்கல்கள் வரும். இந்த செல்டர் வாழ்வு தற்காலிகம் என்றபடியால் அதன் பிறகு அவர்களுக்கு வீடுகள் கொடுக்கப்பட்டு தனித்துப் போகும் போது மாறுவார்கள். ஆனால் புருசன்மாரால் அடித்துத் துன்புறுத்தலுக்குள்ளானவர்கள் என்றால் தான் குறைந்த கட்டண வீடு கிடைக்கும். மெட்ரோ கவுஸ் என்ற வீடு. அது உடனடியாகப் பிரச்சனை வந்து அவர்கள் உடனடியாக செல்டருக்குப் போகவேண்டும். போக முதல் அவர்களுக்கு அடி விழுந்திருக்க வேண்டும். பெரிய அநியாயம் என்னவென்றால். உணர்வு ரீதியில் உளவியல் ரீதியில் துன்புறுத்தலுக்குள்ளானவர்களுக்கு வீடு கொடுப்பதில்லை. உண்மையாய் அடிச்சுக் காயம் இருக்கோணும். பொலிஸ் ரிப்போட் இருக்கோணும். அப்படியானவர்களுக்குத் தான் தனி வீடு கொடுப்பார்கள். உளவியல் ரீதியில் துன்புறுத்தப்படும் பெண்கள் ஏராளம். உதாரணத்துக்கு ஒரு பெண் இருக்கிறா, அவ உளவியல் ரீதியில் பலத்த துன்புறுத்தலுக்குட்பட்டா. உடலியல் ரீதியிலும் துன்புறுத்தப்பட்டா. ஆனால் அவவுக்கு செல்டருக்குப் போகத் துணிவு இல்லை. பலம் இல்லை. எவ்வளவு உதவிகள் கிடைத்தும் முடியவில்லை. சமூகக் கட்டுப் பாடுகளை உடைத்துக் கொண்டு, உறவினர்களை வெறுத்துக் கொண்டு  போறதுக்கு அவ முடியாமல் இருந்தா. கடைசியில் அவவின் பிள்ளைகள் பாடசாலையில் பாடங்களை ஒழுங்காகச் செய்யவில்;லை என்று பாடசாலையில் பிள்ளைகள் ஒடுங்கிப் போயிருப்பது கண்டு, பிள்ளைகளின் நடத்தைகள் நடைமுறைகள் எல்லாம் பலவீனமாக இருப்பது கண்டு ஆசிரியர்கள் அந்தப் பிள்ளைகளிடம் கேள்வி கேட்டுக் கேட்டு அறிந்து கொண்ட பின் குழந்தை நலச்சேவை (hடைனசநn யனை ளழஉநைவல) க்கு அறிவிச்சுத் தான் தெரிய வந்தது அந்தப் பிள்ளைகளுக்கும் தாய்க்கும் இவ்வளவு பிரச்சனைகள் என்று. உனக்குப் பிள்ளைகள் வேணும் என்றால் புருசனைவிட்டுட்டு வர வேணும் என்று. அவர் திருந்தாமல் அவருடன் இருக்கேலாது- ஆனா நீ புருசனோடதான் இருப்பதென்றால் இரு, நாங்கள் பிள்ளைகளைத் தரமாட்டம் என்று சொன்னதால அவ பிள்ளைகள்தான் தேவை என்று புருசனை விட்டு வந்துவிட்டா. அப்படி எல்லோருக்கும் வீடு கிடைக்காது. மிக அண்மையிலிருந்து உணர்வுரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளானோருக்கும் வீடு கொடுக்கிறார்கள். ஆனால் அதை நிரூபிக்கிறது கொஞசம் ~;டம். அண்மையில் நாலைந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் பக்கத்து வீட்டுப் பெண்ணின் கையை வெட்டினா. அவா ஒரு கறுப்பினப் பெண். அவவுக்கு நீண்டகாலமாக மனவுளைச்சல் இருந்தது. இவர் பள்ளிக்கூடத்துக்குத் தன் பிள்ளைகளை மாதக்கணக்கில் அனுப்பவில்லை என்று பள்ளிக்கூடம் தான் hடைனசநn யனை ளுழஉநைவல க்கு அறிவிச்சு அது பிள்ளைகளை எடுத்துக் கொண்டு போய் விட்டது. அவர்கள் என்ன செய்தார்கள்? பிள்ளைகளை எடுத்துக் கொண்டு போட்டார்கள்—. ஆனால் இந்தத் தாய் மனவுளைச்சலில் இருக்கிறா என்று அவவுக்கு ஒரு உதவியும் செய்யவில்லை. அவவின் மனவுளைச்சல் பாராதூரமான பிரச்சனை. அது பற்றிய கவனம் இல்லாது பிள்ளைகளை எடுத்துக் கொண்டு போவது பெரிய கொடுமை. அவவுக்குப் பிள்ளைகள் தான் பொக்கிசம்.. தன்னோடு சேர்த்து வைத்துக் கொண்டிருந்த பிள்ளைகள் திடீரெனப் பறி போனவுடன், இது பக்கத்து வீட்டுக்காறி சொல்லித்தான் நடந்திருக்கிறது என்று நினைத்து ஓடிப்போய் அவவின் கையை  வெட்டிவிட்டா. 2மாதத்துக்கு முன் நடந்தது இது.
சரி. தனியாக வீடு கொடுத்து வாழும் பெண்களுக்கு தமிழ்ச் சூழலில் வெளியில் இருந்து எவ்வகைப் பிரச்சனைகள் வருகிறது?
                பயங்கரமான பிரச்சனகள் இருக்கின்றன. பலருக்குத் தொடர்ந்து பயமுறுத்தல்கள் இருக்கிறது.இந்தப் பெண்கள் சரியான மனோவைராக்கியத்தை வளர்க்கிறேல்ல- அப்ப அவையள் என்ன செய்வினம்- தனித்து வீடு எடுத்தவுடன் வீட்டுக்குள்ள உள்ளிட்டு மாப்பிள்ளைமார் சிலர் இருந்திடுவினம். புருசன்மாருக்கும் சுகமான வழி. அப்படிப் போய் இருப்பவை ஏராளம். சிலர் கௌரவப் பிரச்சனையில் போகமாட்டினம். இதில பெண்கள் திடமாக நிற்காட்டி அவர்களுக்குப் பிரச்சனைதான். திடமாக நிற்காமல் என்றால் இவங்கட வெருட்டல்கள் அவமதிப்புக்களை பொலிசிற்கு அறிவிக்காமல் விட்டால் அது கூடிக்கொண்டே போகும். பொலிசுக்கு அறிவித்தால் என்ன நடக்கும் என்றால் அதிகம் சிக்கலானவர்கள் என்றால் அவரை 500யாருக்குள் போகக் கூடாது என்பார்கள். அதிலும் கூடினால் ஜெயிலிற்குள் போடுவார்கள். நிறையப்பேரை உள்ளுக்குள் போட்டும் இருக்கிறார்கள். ஆனால் தனியாக வாழ்ந்த பெண்களைப் பிரச்சனைப்படுத்தவும் கொலை செய்யவும் செய்கிறார்கள்மொன்றியோலில் ஒரு தமிழ்ப் பெண், ஸ்காபரோவில், யோர்க்கில் இப்படி கொலை நடந்திருக்கு. வெள்ளை இனத்தவரிடையே இப்படியானவை கூட நடந்தகற்கான ஆதாரம் உண்டு. n~ல்ரரில் இருந்திட்டு வீடு பார்க்க- பொருட்கள் எடுக்க எனப் போனவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். பொலிஸ்காரன் பிரிந்த தன் மனைவியைக் கொன்றது எனக் கதை நீழும்.

இந்தச் செல்ட்டர்கள் மற்றும் பெண்களுக்கான அமைப்புக்களில் எத்தனை தமிழ் அமைப்புக்கள் பங்காற்றுகின்றன? இவர்கள் எவ்வகையில் பெண்களின் சிக்கலுக்குள் வேலை செய்கிறார்கள்?
               
  செல்ற்றருக்குள் தமிழ் தெரிந்தோர் மிக மிகக் குறைவு. வேலை செய்யும் தமிழரும்; மிகக் குறைவு. அதைவிட வெளியில் தெற்காசியப் பெண்கள் நிறுவனம் என்று ஒன்று இருக்கிறது. அதில் தமிழ் மொழி பேசுபவர்கள் இருக்கிறார்கள். குடும்ப சேலைகள் சங்கம். தமிழீழச்சங்கம், வசந்தம்செனற் யோசெப் பெண்கள் எதவி நிறுவனம். சேபோர்ண் n‘ல்த் சென்ரர் போன்ற வற்றழல் அல தொடர்பாக வேலை செய்ய தமிழ் ஓழியர்கள் உள்ளனர். ஆனால் வீடுகளில் சென்று உதவுவாரில்லை. நான் வந்து உளவியல் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறேன். கூடுதலான பெண்கள் உளவியலில் பாதிக்கப்படுகிறார்கள்- என்னுடைய வேலைத்தளத்தில் ஒரேயொரு தமிழ் பேசும் ஆண்தான் இருக்கிறார். நாங்க வீடுகளிலும் சென்று உதவுவோம்.. ஆனால் நான் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தனிப்பட்ட முறையில் சந்தித்து உதவிவருகிறேன்.

எத்தனை பாதிக்கப்பட்ட பெண்கள் வரையில் உங்கள் தளத்தில் இருப்பார்கள்?
                
நிறுவனம் சார்ந்த தடயங்களை நான் இங்கு கூறமுடியாது. ஆனால் எத்தனையோ பெண்கள் இருக்கும் இடத்தில் ஒரேயொரு ஆண் மட்டும்தான் இருக்கிறார்- நான் உளவியலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில்தான் வேலை செய்கிறேன்.அவையளுக்கு 18 க்கு உட்பட்ட பிள்ளைகள் இருக்க வேணும். அவர்கள் வீடற்றவர்களாக இருக்க வேண்டும். அப்படியானவர்களைத்தான் நாங்கள் இதில் எடுத்து வேலை செய்கிறோம்- இது வேலை சம்பந்தமான தளம்- இதில் ஒரு ஆண் மட்டும்தான் இருக்கிறார். இது குடும்பம் என்ற சூழலில் அல்லாமல் தனிப்பட்டவர்கள் என்று பார்த்தால் அதில் நிறைய ஆண்கள் உளவியலில் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

இவர்கள் எவ்வகையான பாதிப்புக்குள்ளானவர்கள்?
                
இவர்கள் அதிகமான யுத்தம் சம்பந்தமான பாதிப்புக்குள்ளனவர்கள்- டிப்பிரசன்தான் - மன உளைச்சல் கூட- இதில் பாரதூரமான மனச்சோர்வுக்கு உள்ளானவர்கள்தான் அதிகம். சாதாரண மனச்சோர்வுள்ளவர்களை நாம் எடுப்பதில்லை. யுத்தத்தில் நேரடிப் பாதிப்புக்குள்ளானவர்கள் இவர்கில் பலர்;. இது எனது வேலை சம்பந்தமானது. வெளியில் நான் நிறையப் பேரைப் பார்க்கிறேன். நிறையப் பிரச்சனைகளுக்குள்ளான பெண்களை செல்ட்டர் வழிய போய்த் தனியாகச் சந்திக்கNpறன். வேண்டிய உதவி செய்யிறன். கிட்டடியில் எல்லாம் ஒரு பெண்ணுக்கு புருசன்ர அண்ணன்காரன் போய் வீட்டில அடிச்pருக்கிறான். ஆம்பிளை. நல்லா ஆங்கிலத்திலை கதைப்பார்;-. பொலிஸ்காரர் போனவுடன் அவவுக்கு சுகமில்லை. அதுதான் ஓடுறா என்று சொல்லி நன்றாகக் கதைத்து அனுப்பிவிட்டான். அந்தப் பெண்ணுக்கு போன் பண்ணக் கூடிய வழியி அப்ப இருக்கேல்லை வீட்டில. மாமி போணும் கையுமை;. பக்கத்துவீட்டுக்காரனிட்ட போய்க்கேட்க அவனும் விடேல்ல. பக்கத்துவீட்டுக்காரனிட்ட புரு~ன் இவவுக்கு விசர் என்று சொல்லித் தடுத்திட்டான். அவவுக்கு மென்டல் பிரச்சனை அதுதான் வந்திருக்கிறா என்று. அடுத்த வீட்டுக்காரனிட்ட போய்த்தான் போன் பண்ணியிருக்கிறா. இந்தப் பொலிசுக்காரர் வந்து இந்தப் பிள்ளைக்கு எவ்விதத்திலும் உதவவில்லை. அவ நல்ல திடமானவ- அவவுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை- இப்படி பொலிசுக்கு முன்னாலையும் கோட்டிலையும் பொம்புளையளை விசர் எண்டு மென்டலாக்கிறவை நிறைய இருக்கினம்.. நிறையப்பேர் பெண்களின் துன்பத்தை மென்டலாகக் காட்டிறவர்கள். கோட்டில காட்டிறதுக்கு டொக்ரரிட்டக் கூட மென்டல் என்று லெட்டர் எடுக்க வெளிக்கிட்டிருக்கினம். ஒரு குடும்பத்தில பிள்ளையை எடுக்கிற பிரச்சனையில தாயை மென்டல் என்று டொக்ரரிட்ட லெட்டர் எடுக்க முயற்சி செய்திருக்கினம்- இப்படி பெண்களை மென்டலாக்கிறது கனடிய தமிழச்சமூகத்திலை அதிகம். இங்கு அதிகமாக இருக்கிறது.

செல்ட்டரில இருக்கிற பெண்களுக்கு அங்கிருந்து வேலைக்கு வேண்டிய வசதி செய்து கொடுக்கினமா?
                
போய் வரலாம். அவர்களாகவே வேலைதேடவேண்டும். அவர்களது பிரச்சனைகள் குறித்து அதாவது அதிக மனவுளைச்சலுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு அவர்களே கூட்டிக் கொண்டு போய் வருவினம். ஆனால்  அவையளுக்குள் தன்னம்பிக்கையை வளர்க்க வேணும்.. தாங்களாக இயங்க வேணும்- என்றதற்காக அவர்களாகவே வேலை தேடி போய் வரக்கூடிய சூழலை ஏற்படுத்துகிறார்கள். பிள்ளைகளை வெளியில் விட்டுட்டு போக னுயல உயசந எடுத்துக் கொடுக்கினம்.. செல்ரர்களில் குழந்தை பராமரிப்பு உதவியும் உண்டு. அநேகமாக செல்ட்டருக்குப் போன பெண்கள் முன்னேறுவதுதான் அதிகம்..

பொதுவாக குடும்பங்களில் ஏற்படும் நெருக்கடி- ஆண்களின் வன்முறை பொருளாதாரத்தில் முன்னேறிய, படித்த பெண்கள் மத்தியிலும் இதே சூழல் நிலவுகிறது தானே?
                
ஆம்- நிறையவே இருக்கிறது. அவர்க இங்குள்ள சூழல் நன்கு புரிந்தவர்களாக இருப்பார்கள். தமது மரியாதை பற்றி அதிகம் யோசிப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் எங்களை அணுக மாட்டார்கள். தாங்களாகவே செல்ட்டர்களுக்கு போவார்கள். ஒரு டொக்ரர் கூட அவவின் குடும்பத்துக்குள் உளவியல் சார்ந்த பிரச்சனை வந்து பிரிந்திருக்கும் நிலை வந்தது. பின் என்ன நடந்தது என்று தெரியாது. ஆனால் படித்த பெண்கள் வன்முறைக்கு ஆளாவதும் சகஜம். சமூகப் பெறுமானங்கள் அவர்களையும் விட்டு வைக்கவில்லை. ஆணாதிக்கம் எந்த மட்டத்தில் இல்லை?

பாடசாலைக்கு போகும் பெண்கள் சிறுமிகள்- அவர்களின் குடும்ப உறவினர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவது நமக்குத் தெரியும். ஜரோப்பாவில் 2000 ஆண்டளவில் 3 தமிழ்ச் சிறுமிகள் பாலியல் உடலுறவுக்கு உட்பட்டுள்ளது அதுவும் அந்தப் பிள்ளைகளின் தந்தையாலே துன்புறுத்தப்பட்டதும் அது வழக்குப் பதிவு செய்யப்பட்டதும் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்- அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளராகப் போனவரின் தகவல் இது- (இதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை.) அந்த மாதிரியான நிலை இங்கு எப்படியுள்ளது?
                பாடசாலைப் பெண்கள் மட்டுமில்லை- பொதுவாக எல்லாச சிறு, இளம்பெண்வர்ககத்தினரையும் இதில் அடக்கலாம். நிறையவே இருக்குது. இருக்குது என்று சொன்னவுடன் உடனே என்ன செய்வினம் என்றால் எங்கட ஆட்கள்- ஜயோ எங்கட சமூகத்தில அப்படி ஒன்றும் இல்லை என்றது போல் ஓடிவருவினம். அப்படி ஒரு மாயையைப் பரப்பி வந்திருக்கினம். எங்கட ஆம்பிளையள் றேப் பண்ணுவதில்லை- எங்கட ஆம்புளையளுக்கு யுனைள இல்லைஎங்கட சமூகத்தில யுனைள என்ற சாமானே இல்லை. அது எல்லாம் வேறு யாருக்கோ என்ற எண்ணம் வலுவாக இருக்கிறது. இங்கு ஒரு கேஸ் நடந்தது- ஒரு தமிழ்ப் பாட்டன் ஒரு சின்னப் பிள்ளையைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியது- அதைப் பெரிதாக அட்டகாசம் செய்து என்ன இது உவங்களுக்கு விசரோ.. பாட்டன் ஒரு ஆசைக்கு பிள்ளையை நுள்ளிக் கிள்ளி இதெண்டால் இதை இப்படி எடுக்கிறாங்களே என்று சொல்லி மூடிக் கட்டிக்கொண்டு சண்டைக்கு போனார்கள்- அது தாண்டிஅந்தப் பிள்ளை போய்ச் சொல்லியிருக்கிறது- இது உண்மை.யாய் நிகழ்ந்திருக்கிறது என்று யோசிப்பதில்லை. அந்தக் குழந்தையையும் வெருட்டி பேசி சொல்லாமல் மறைக்கினம். கனக்க வெளியில போக வேண்டாம்- என்னுடைய மகனைப்பற்றிச் சொல்ல வேண்டும். அவனுக்கு சின்ன வயதில் இதேமாதிரி அனுபவங்கள் நடந்திருக்கிறது. ஆனால் என்னுடைய மகனே என்னுடன் வாய்விட்டுக் கதைக்கேல்ல- இப்ப மகன் வளர்ந்து அம்மாவிட்ட சொல்லலாம் என்ற சூழல் வந்திருக்கிறதுசொல்கிறார்- இப்படியான வன்முறைகள் மிக நெருங்கிய உறவினர்களால்தான் அதிகமாக நடக்கின்றது- இப்படியான சம்பவங்களை வெளியில் சொல்லக்கூடிய நிலையை நமது சூழல் வளர்க்கேல்ல. இப்ப எனக்குச் சின்ன வயதில் நடந்த,  4,5 வயதில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள்  என்னை மனரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அது பற்றி எனக்குச் சொல்லக் கூடிய சூழலை என் பெற்றோர்கள் வளர்க்கேல்ல. அது சொல்லக் கூடாது என்று செய்பவர்களே சொல்லிப் போடுவினம். சொன்னால் சொக்கிலேட் தரமாட்டேன் என்றால் சொக்ளட் காணாத கிராமப்புறச்சிறு குழந்தை என்ன செய்யும்;. சொக்லேட் அந்த நேரத்தில் சரியான முக்கியம். இது பற்றிச் சொன்னால் சைக்கிளில் ஏற்றமாட்டேன், ஆசுப்பத்திரிக்குக் கூட்டிக்தொண்டு போய் ஊசி போடுவிப்பேன், பேயிட்டைக் குடுத்திடுவன் என்றெல்லாம் பயப்படுத்துவார்கள் என்றால்? ஒரு 5 வயதுப் பிள்ளைக்கு சைக்கிளில் ஏறிப் போவதுதானே முக்கியம்.. உணமையில் சிறுவயதில் நிகழ்ந்த நிகழ்வுகள் படம் போல மனதில். ஆனால், சில நிகழ்வுகள் துணிக்கையாகத்தான் நினைவில் வருகிறது. அப்போதெல்லாம் எங்களது பெற்றோர் எங்களுக்குச் சொல்லித்தரேல்ல. இது பிழை. அது பிழை என்று. இந்தப் பாலியல் அறிவூட்டல்கள் எங்களது பெற்றோர்களுக்கு இருக்கேல்ல. ஏன் எனக்குக் கூட இருக்கேல்ல. நான் என்ரை பிள்ளையளுக்குச் சொல்லிக்கொடுக்கவில்லையே. இப்ப நிலமை மாற்றம்... இப்போது ஒவ்வொரு பெற்றோரும் இந்த அறிவூட்டல்களில் பிள்ளைகளை இப்படியான சூழல் இருக்குது என்று தெரியப்படுத்த வேணும். இப்படி நடந்த பெற்றோர் சிலர் வந்து சரியாக் கவலைப்பட்டிச்சினம். ஒரு சில பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டிருக்கினம். ஒரு பெண்ணின் பிள்ளையை அவவின் தம்பிக்காரனுடன் விட்டுட்டுப் போடுவினம். அந்தப் பிள்ளை அவனால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. இது தாய்க்குத் தெரியாது. தாய் நம்பப்போறாவோ. இந்தப் பிள்ளை பாடசாலையில் சொல்லக்கூடிய சூழல் ஏற்ப்பட்டது. அதால சொல்லி hடைனசநn யுனை ளுழஉநைவல மூலம்  தாய்க்குச் சொல்லி தெளிவாக அவர்களுக்குத் தெரிஞ்சிட்டுது. இது நடந்திருக்கிறது என்று. அதன்பிறகு அவரை அந்த வீட்டில் வைத்திருக்கவும் ஏலாது. அதைவிட அவரை கைது செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இதனை விளங்கிக் கொள்ளக்கூடிய குடும்பம் என்றபடியால் அவருக்குரிய நடவடிக்கைகளை சுமுகமான முறையில் செய்தார்கள். ஆனால் எல்லாக் குடும்பங்களும் அப்படிச் செய்ய மாட்டினம். நம்பமாட்டினம். இன்னொரு குடும்பத்தில ஒரு பிள்ளையின் தகப்பன். தாய் இல்லாத பிள்ளை. அவர்தான் வளர்த்துக் கொண்டு வந்தார்- அவர் வந்து அந்தப் பிள்ளையுடன் தகாத முறையில் நடந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லி குற்றம் சாட்டி பிள்ளையிடம் இருந்து பிரித்திருக்கிறார்கள்- ஆனால் அவர் தான் அப்படிச் செய்யவில்லை என்று வாதாடி- னுழஉவழசஇடம் போய் கடிதம் எடுத்து ஆதாரம் தேட முயற்சி செய்தார். இப்ப அந்தப் பிள்ளை சொல்வதினை மறுத்து முறியடிக்கத்தானே பார்க்கிறார்கள்- அதைப் பொய்யாக்கத்தானே பார்க்கிறார்கள்- சிலர் கேட்கலாம் அவர் உண்மையாகச் செய்தார் என்று என்னென்று உங்களுக்கு தெரியும்? என்று- எனக்கு தெரியாது. ஆனால் அந்தக் குழந்தை சொல்வதனை நாம் ஏற்கத்தானே வேண்டும். அவர் 10 பேரிட்ட சொல்லிவிடுகிறார்- என்னை இப்படிச் செய்திட்டாங்கள் என்று- சமூகம் என்ன செய்யிறது- ஜயோ தாயில்லாம வளர்த்த அந்தாளப் பற்றி இப்படியா சொல்லுறது என்று- அதை நாங்களும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. இப்படி நடக்கலாம்- இப்படி நடக்கும்- இருக்கு- எங்களிட்ட இருக்கு என்பதை ஏற்றுக்கொள்ள நமது சமூகம் தயாரில்லை. ஆனால் இந்தக் கொடுமை நமது சமூகத்தில் நிறையவே இருக்கிறது. அண்மையில் பெற்ற தந்தை 12 வயதில் தனக்குப் பாலியல் கொடுமை செய்ததாக 25 வயதுப் பெண் கூறினார்.

குடும்பங்களில் நிலவும் சிக்கல்கள் பிரிவினைகள் எல்லாம் பாலியல் பிரச்சனைகள் சார்ந்தது. இங்குவாழும் குடும்பங்களில் பாலியல் உணர்வு நிவர்த்திகள் ஏற்படாததும் தான் பெரும்பாலான உளவியல் சிக்கல்களுக்கும் குடும்பச் சிக்கல்களுக்கும் காரணம் என்று ஓரு கருத்து நிலவுகிறது. இது ஆண் சார்ந்த கருத்தாகத்தான் இருக்கிறது- இந்த கருத்துப் பற்றி உங்கள் கணிப்பு என்ன?
                இதில வந்து ஆண்களுக்கு பாலியல் உணர்வு கூட- பெண்களுக்கு பாலியல் உணர்வு குறைவு என்ற கருத்துடன் கூட எனக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால் பாலியல் உணர்வு குறைந்த ஆண்கள் எங்களிடத்தில் பெருகிக் கொண்டு வருகிறார்கள என்பது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ள ஒன்று வந்து காரணம்- குடிவகை- குடிப்பழக்கத்தால் பாலியல் உணர்வு குறைந்துவிடும் நிலையில் பல குடும்பங்களில் பிரச்சனைகள் வருகிறது. பெண்களால் ஆண்களின் பாலியல் தேவையை நிவர்த்தி செய்யவில்லை என்பது சில குடும்பங்களில் இருக்கிறது- பெண் ஏற்கனவே மனவுளைச்சலுக்குட்பட்டு மனச்சோர்விற்கு ஆட்பட்டிருந்தால் அவவிற்கு பாலியல் உணர்வு இருக்காது. அதை விளங்கிக் கொள்வதில்லை. ஏன் பாலியல் உறவுக்கு வருகிறார் இல்லை என்பதன் விளக்கத்தை அறிய முற்படுவதில்லை- வேலையால வந்து கதிரைக்குள்ள இருந்தால்- நான் வேலைக்குப் போறன்- நீ வீட்டில தானே இருக்கிறாய் உனக்கென்ன- என்று சொல்வதுதான் இந்த ஆண்கள்- 2குழந்தைகளை வீட்டில வைத்து அதுவும் கைக்குழந்தைகளை நாள் முழுவதும் பராமரிக்கிறது பொம்புளை;- 12 மணித்தியாலம் வேலை செய்யிற ஆம்பிளையைவிடக் களைச்சுப் போவா- பிறகு வேலையால  வந்த அவரக் கவனிச்சு, அவருக்கு சாப்பாடு போட்டு வரவும் அவவுக்கு வேலை ஓயாது- அதுக்குப்பிறகு அவருக்கு வு. பார்க்கிறதுதான் வேலையாக இருக்கும். அநேக குடும்பங்களில் பெண்களுக்கு அதுக்குப்பிறகும் வேலை ஓயாது- கழவுவது- துடைப்பது- சாப்பாடு கட்டி வைப்பது- அப்படிச் செய்யேக்க அந்தப் பிள்ளை களைச்சுத்தானே போவா- அப்ப நீங்க நினைச்சுப் பாருங்கோ- இப்படியான பொம்புளையள் பாலியல் உணர்வோட இருப்பினம் என்று எதிர்பார்க்கலாமா? அதுவும் பக்டரிக்கு வேலைக்குப் போகும் பெண்களுக்கு இவ்வளவு வேலையும் வீட்டில் செய்ய அவர்களக்கு நித்திரை கொள்ள நேரமே இருக்காது- உடம்பு களைச்சுப் போகும். அப்ப இந்தப் பெண்கள் போய்ப் படுக்க ஆண்கள் பாலியல் உணர்வில் உழன்றால் அவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கும். அவையோடை வேலையைப் பங்கிட வேண்டும்.. களைப்பில் மல்லாந்து கிடக்கிற பொம்புளையை செக்ஸிற்கு கூப்பிடுவது அநியாயம்.. அதைவிட இங்குள்ளது மாதிரிh வாய்வழிப் புணர்ச்சி- எல்லாம் நமது பெண்களுக்கு அந்நியமானது- அவர்களுடைய பாலியல் படிப்பில் அறியப்படாதது. இதை எதிர்பார்த்தும் ஏமாற்றம் ஆண்களுக்கு ஏற்படுகிறது. பாலியல் உறவு பரஸ்பர புரிந்துணர்வின் மூலம்தான் வெற்றியான உறவாகும். வயாகரா வெற்றியளிக்கவில்லையே.


இங்கு பெண்களிடம் வேறு எவ்வகையான சிக்கல்களைக் காண்கிறீர்கள்? இந்தச் சீர்;கெட்ட மனோநிலையில் தமிழ்க் குழந்தைகள் எவ்வகையான பாதிப்புக்குள்ளாகிறார்கள்?


கனடாவுக்கு வந்த Immigrants  எல்லோரும் செறிந்து வாழும் நிலைதான் இங்கு இருக்கிறது. எங்கள் சமூகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்த்தீர்கள் என்றால் வேறு சமூகங்களுடனோ அல்லது மற்றக் கலாச்சாரங்களுடனோ கொண்டு வந்து இணைக்கும் போக்கு இல்லை. கலியாணவீடோ செத்தவீடோ என்னவென்றாலும் நம்மவர்கள் தனித்து இருப்பார்கள். கலை நிகழ்ச்சிகள் என்றால் பரதநாட்டியம் அளவுக்குத்தான் அறிவு இருக்கிறது. என்னென்றால் இன்னொரு நாட்டிற்கு வந்து அங்குள்ள சூழலை உள்வாங்குவது இல்லை. நம்மவர்களுக்கு ஒரு பயம். நாங்கள் நமது கலாச்சாரத்தை விட்டு வெளியில் போனால் பிள்ளைகளும் போய்விடுவார்கள எண்டு;. அந்தப் பயத்தின் காரணமாக அநேகர் அங்கால தொடர்பு கொள்ளுகினம் இல்லை. அதைவிட எங்களிட்ட ஒரு றேசிஸ்ட் கருத்தோட்டம்; ஆழமாகச் சமைஞ்சுபோய் இருக்கிறது. வெள்ளைக்காரனிட்ட இருக்கிறதைவிட எங்களிட்ட பல மடங்கு இருக்கிறது-கறுப்பு இனத்தவர்ளுடன் பிள்ளைகளைப் பழகக்கூட விடமாட்டார்கள். நட்பாக இருக்க விடமாட்டார்கள். ஒரு பிள்ளையை கறுப்புப் பிள்ளைதான் அவவின் குடும்பப் பிரச்சனையில் இருந்து காப்பாற்றினவர்கள். ஆனால் அந்தப் பிள்ளையின் சகோதரங்கள் அவவைச் சேர்த்துப் பழகுவதில்லை. ஏனென்றால் அவ கறுப்புப் பிள்ளையுடன் கூடி இருந்தவா என்றுஇந்த மனோநிலையை குழந்தைகளிடமும் விதைக்கிறார்கள்.


மற்றது இதழ்1
2003

No comments:

Post a Comment