Sunday 17 May 2015

பொய் சொல்லக் கூடாது பாப்பா




கற்சுறா
ஒரு முறை எனது தந்தையார் பாரதியாரின் பாடல் குறித்து தனது நண்பருடன் வாக்குவாதப்பட்டார்.
பாரதியார்,

“பொய் சொல்லக் கூடாது பாப்பா” என்று ஒரு குழந்தைக்கு சொல்லும் பாடல் அது.

எதுவுமே அறியாத குழந்தைக்கு பொய் சொல்லக் கூடாது பாப்பா என்று பாரதியார் எப்படிச் சொல்ல முடியும்? இப்போ ஒரு பாப்பா பொய் என்றால் என்ன வென்று கேட்டால் என்ன விளக்கம் சொல்ல முடியும்?
பாப்பாவுக்கு பொய் என்பதைப் பாரதியாரே முதல் அறிமுகப்படுத்துகிறார் என்பது எனது தந்தையாரது வாதம். அதற்குப்பதிலாய் பாரதியார் “மெய் சொல்ல வேண்டுமடி பாப்பா” என்று பாடியிருக்கவேண்டும் என்றார்.
இந்த விவாதம் நடந்தது இலங்கையில்.

இப்படிக் கற்பிக்கும் விடையங்கள் குறித்து மிக மிக அவதானம் இருக்கவேண்டும். அதிலும் குழந்தைகளின் கல்வி குறித்து எப்படியான அவதானமும் நுண்ணிய புலனும் வேண்டும்?

 “அ”க்கு அம்மா “ஆ”க்கு ஆடு எனும் நாங்கள் “இ”க்கு இரத்தம் என்று சொல்லி கையைக் கத்தியால் வெட்டி வழியும் இரத்தத்தைப் படம் போட்டுக் காண்பிக்க முடியுமா?
குழந்தைகளுக்குப் கற்பிக்கும் போது ஆசான்கள் அதீத கவனத்துடன்  கவனமாக இருக்க வேண்டாமா?

இன்று ப.அ. ஜயகரன் தனது முகநூலில் ,
https://www.facebook.com/pajayakaran?fref=ts
இங்குள்ள தமிழ்ப்பாடசாலைகளது கல்வித்திட்டங்கள் கல்வி கற்பிக்கும் முறை தமிழ் ஆசிரியாகளது அக்கறையின்மை குறித்து பதிவிட்டிருந்தார். தகுந்த விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய முதற் பதிவு அது. அந்தப் பதிவு குறித்து அலட்சியமோ அழிச்சாட்டியமோ பண்ணமுடியாது. அதனை முன்னுதாரணமாகக் கொண்டு அத்தனை பெற்றோர்களும் தமது குழந்தைகளது எதிர்காலம் குறித்து உரிய அக்கறை கொள்ள வேண்டும்.

சிறிது காலத்தின் முன் கனடிய கல்விச் சபையால் நடாத்தப்படுகின்ற தமிழ் மொழித் திறமை நெறி அதாவது Tamil language credit course கனடாவில் பிறந்த பெருமளவிலான பிள்ளைகள் தமது தாய் மொழியைக் கற்பதற்கு கனடிய அரசால் செயற்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில் கனடாவில் பிறந்த தமிழ்ப் பிள்ளைகள் மிக அதிகமாக கல்வி கற்கிறார்கள். இவர்களில் உயர்தரச் சித்திக்கென ஏற்படுத்தப்பட்டது இந்த தமிழியல் என்ற நூல். இந்த நூலின்; முதல் அத்தியாயம் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் பற்றியது.
இந்தப் பக்கத்தில் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் குறித்து பிள்ளைகளுக்கு இப்படிச் சொல்லப்படுகிறது.




“போர்காரணமாகப் பெருமளவிலான இலங்கைத் தமிழர் புலம் பெர்ந்ததை நாம் அறிவோம். இவர்களது துன்பத்தை “அகதியின் முகம்” எனும் குறு நாவலாகச் செ. யோகநாதன் வெளிக்கொண்டுவந்தார். இதே போன்று அ.முத்துலிங்கம் அவர்களது சிறுகதைகள் புலம்பெயர்ந்தோரது கவலைகளையும் வலிகளையும் பதிலு செய்கின்றன. காசி ஆனந்தனது பாக்கள் புலம்பெயர்ந்தோரது ஏக்கத்தைப் படம் பிடித்தக் காட்டுகின்றன.”
இவர்களைப் போல இன்னும் பலவுள்ளன… 
என்கிறது.

இப்போது சொல்லுங்கள் நமது பிள்ளைகள் தமிழ் மொழி கற்க வேண்டுமா? இந்த தமிழியல் என்ற நூலைப்படித்துச் சித்தி எய்த வேண்டுமா? இந்தத் தமிழ்ப் பாடசாலைகள் இப்படி இயங்க வேண்டுமா?
கனடாவில் வாழும் பிள்ளைகள் தமிழ் மொழியை விரும்பி கற்பதற்கு முன்வரும் போது அவர்களுக்குக் கொடுக்கப்படும் தரவுகள் உண்மையாக இருக்கவேண்டும்,  கற்பிக்கும் ஆசிரியர்களே தவறான தகவல்களை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் போது அதையும் பாடத்திட்டத்தில்  கொண்டுவரும் போது ஆசிரியர்கள் அயோக்கியர்களாக மாறிவிடுகிறார்கள். இந்தத் தவறு பிள்ளைக்குத் தெரியவரும் போது அந்த ஆசிரியர்களின் தகமை கேலிக்குரியதாக மாறிவிடும்.
உண்மையில் இந்தத் தவறு தெரியாமல் செய்த தவறல்ல.
வேண்டுமென்றே செய்தது. இது வரலாற்றைத் திரித்தல். முகத்துதிபாடுதல். அக்கறையின்மை. துஸ்பிரையோகம்.


இந்த தமிழியல் நூல்

உருவாக்கம் 
சண்முகம் குகதாசன்

நூலாக்க உதவி
அனுசியா பாசுக்கரன்
            இராச்மீரா இராசையா
சுpவச்செல்வி சிவசுந்தரலிங்கம்
இரஞ்சினி சறீகதிர்காமநாதன்

மேய்ப்பு
விமலேசுவரி விசுவலிங்கம்

ஓளி அச்சு
சிந்துயா இரத்தினசபாபதி

வடிவமைப்பு /அட்டை
 நிலா துசியந்தன்

அச்சு
விரைவு அச்சுக் கலையகம்

செயற்றிட்ட நிறைவேற்றுனர்
சன்முகம் குகதாசன்

திருத்திய இரண்டாம் பதிப்பு

2013

பதிப்புரிமை
கனடாத் தமிழ்க் கல்லூரி
6-3150 எக்லின்ரன் சாலை கிழக்கு
இசுக்காபரோ, ஒன்ராறியோ
கனடா




 

No comments:

Post a Comment